பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர்...உயிர் நீர்... ஊர்வலத்தில் விழிப்புணர்வு!

Added : ஜூலை 12, 2019
Advertisement
 மழைநீர்...உயிர் நீர்... ஊர்வலத்தில் விழிப்புணர்வு!

உடுமலை:உடுமலை அருகே உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி பேரணியை துவக்கி வைத்தார்.
மழைநீர் சேகரிப்பின் அவசியம், சேமிக்கும் முறை, மரம் வளர்த்தல் குறித்த வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமையாசிரியர் (பொ) சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் சரவணன், 'மழைநீர் சேகரிப்பின் அவசியமும் தேவையும்', குறித்து பேசினார்.
ஆசிரியர் ஜான்பாஷா, 'மழைநீர் உயிர்நீர்', என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள், ஜெ.ஜெ.,நகர், மில்கேட், கென்னடி நகர், முத்துநகர், வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். ஆசிரியர் செந்தில்குமார் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக, வினாடி-வினா போட்டி நடத்தினர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் நன்றி தெரிவித்தார்.உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவியர் துங்காவி கிராமத்தில், ஊர்வலம் நடத்தினர்.
பஸ்ஸ்டாப் வளாகம் தொடங்கி முக்கிய தெருக்கள் வழியாக சென்று ஊராட்சி அலுவலக வளாகம் வந்த பேரணியில், 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.இதில், மழை நீர் சேகரிப்பு, தலை கவசம் அணிதல், சாலை விதிகளை பின்பற்றுதல், கிராமப்பகுதியை துாய்மையாக வைத்திருத்தல், படியில் பயணிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை அட்டையில் எழுதியும், கோஷமிட்டும் ஊர்வலமாக சென்றனர். நேற்று முன்தினம் தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வேலை செய்யும் இடத்துக்கு சென்று, மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X