பொது செய்தி

தமிழ்நாடு

முதலில் எங்களுக்கு கொடுங்க! 2017-18 மாணவர்கள் கோரிக்கை

Added : ஜூலை 12, 2019
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில் 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஆண்டுதோறும் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து வெளியேறுகின்றனர்.கடந்த 2017-18 கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு 'லேப்டாப்' வினியோகிக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டு துவங்கியதும், இரண்டு கட்டமாக பள்ளிகளுக்கு கல்வித்துறையிலிருந்து, 'லேப்டாப்', நடப்பு கல்வியாண்டின் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன.ஆனால், எந்த கல்வியாண்டுக்கு லேப்டாப் ஒதுக்கீடு என்பதை கல்வித்துறை அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2017-18 மற்றும் 2018-19 மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில் சென்று லேப்டாப் கிடைக்குமா என விசாரித்து வருகின்றனர்.இது குறித்து, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவர்கள், தங்களுக்கு 'லேப்டாப்' வழங்க வலியுறுத்தி, உடுமலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இக்குழப்பத்தால், விலையில்லா லேப்டாப் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X