பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் பஸ்கள் தேவை! பள்ளி நேரத்துக்கு கூடுதல் பஸ்கள் தேவை!

Added : ஜூலை 12, 2019
Advertisement

உடுமலை:உடுமலை-ஆண்டியகவுண்டனுார் வழித்தடத்தில், பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஒன்றியம், ஆண்டியகவுண்டனுாரில், அரசு துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள குழந்தைகள், உயர்நிலை வகுப்புகளுக்கு செல்ல, பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
கிராமத்திலுள்ள பெரும்பான்மையான மாணவர்கள், மலையாண்டிபட்டணம் உயர்நிலைப்பள்ளி, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படிக்கின்றனர். கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களும், பள்ளி நேரத்தில் இயக்கப்படும் பஸ்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.காலை பள்ளி நேரத்தில், கல்லாபுரத்திலிருந்து, இயக்கப்படும் பஸ் எண் 6, ஆண்டியகவுண்டனுார் கிராமத்துக்கு காலை, 8:00 மணிக்கு வருகிறது. ஆனால், முந்தைய கிராமங்களிலேயே கூட்டம் ஏறி விடுவதால், ஆண்டியகவுண்டனுார் மாண
வர்கள் பஸ்சில் ஏற முடிவதில்லை. கூட்ட நெரிசலால் பல குழந்தைகள் பஸ்சில் ஏறாமல், விடுப்பு எடுக்கும் நிலையும் உருவாகிறது. மாணவர்களை, தனியார் வாகனங்களில் வாடகை செலுத்தி அனுப்பும் அளவுக்கு, பொருளாதார நிலை இல்லை எனவும் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். போக்குவரத்து கழகத்தின் சார்பில் பள்ளி நேரத்தில், இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X