பொது செய்தி

தமிழ்நாடு

வாசிப்பை நேசிக்க பள்ளியில் நிகழ்ச்சி

Added : ஜூலை 12, 2019
Advertisement

உடுமலை:கண்ணமநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வியாண்டு தோறும், புத்தக வாசித்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. கண்ணமநாயக்கனுார் பள்ளியில், உடுமலை இரண்டாம் கிளை நுாலகத்தின் நுாலக வாசகர் வட்டம் சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். நுாலகர் கணேசன், வாசகர் வட்ட துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு, புத்தக வாசிப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருக்குறள் வினாடி வினா போட்டி நடந்தது.தொடர்ந்து, செல்வி 'காஸ்' ஏஜன்சி சார்பில், 'துாய்மை இந்தியா', திட்டத்தின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. எரிவாயு சேமிப்பு குறித்து அய்யப்பன் பேசினார். மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X