பொது செய்தி

தமிழ்நாடு

விதை நெல் விதைக்கும் பணி துவக்கம்: கூடலூர் விவசாயிகள் ஆர்வம்

Added : ஜூலை 12, 2019
Advertisement
 விதை நெல் விதைக்கும் பணி துவக்கம்: கூடலூர் விவசாயிகள் ஆர்வம்

கூடலுார்:கூடலுார் பகுதியில்,பருவமழை மிதமாக பெய்து வருவதால், விவசாயிகள் விதை நெல் விதைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கூடலுார், பந்தலுார், முதுமலை பகுதிகளில் கடந்த மாதம் பருவமழை ஏமாற்றியது. நீர் நிலைகளில் நீர்வரத்துஎதிர்பார்த்த அளவில் இல்லை.வயல் நிலங்கள் ஈரப்பதம் கூட இல்லாமல் வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால், நெல் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
கவலை அடைந்த நெல் விவசாயிகள், விதை நெல் விதைப்பதற்காக ஜூலை மாத பருவமழை எதிர்பார்த்து காத்திருந்தனர். துவக்கத்தில் ஏமாற்றிய பருவமழை கடந்த வாரம் முதல், மிதமாக பெய்து வருகிறது. நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வயல்களில் மழை நீர் தேங்கி ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வயல்களில் விதைநெல் விதைக்கும் பணிகளை விவசாயிகள்துவங்கியுள்ளனர்.வயல்களில் நெல் நடவுக்கான உழவு பணிக்களை துவங்கி மேலும், தொடர் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.விவசாயி தேவராஜ் கூறுகையில், ''எந்த ஆண்டும் இல்லாத வகையில், நடப்பு ஆண்டு, ஜூன் மாதம் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இம்மாதம் துவக்கம் முதல் மிதமான மழை பெய்து வருவதால், விதை நெல் விதைக்கும் பணியை துவங்கியுள்ளோம். மழை தொடர்ந்து பெய்து வருவதால், விரைவில் வயல்களில் நெல் நடவுக்காக உழவு பணிகள் துவங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X