பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்புதூர் கிராமத்தில் 22 வீடுகள்: மனுநாள் முகாமில் கலெக்டர் தகவல்

Added : ஜூலை 12, 2019
Advertisement

ஊட்டி;'குன்னுார் அருகே செங்கல்புதுார் கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 22 வீடுகள் கட்டப்படும்,' என, கலெக்டர் தெரிவித்தார்.குன்னுார் அடுத்துள்ள உலிக்கல் பேரூராட்சி செங்கல்புதுார் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ''அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பழங்குடியின மக்கள் ஒருங்கிணைந்து அரசின் அனைத்து திட்டங்களை முறையாக பயன்படுத்த வேண்டும்.ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், செங்கல்புதுார் கிராமத்தில், 22 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.தொடர்ந்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாற்று திறனாளிகள் உதவி தொகை, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தொகை, மருத்துவ இயலாமை உதவி தொகை ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ரூ.ஆயிரம் வீதம், 10 பேருக்கு ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், '10 பேருக்கு ஜாதி சான்று, 12 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள், ஒருவருக்கு ஈம சடங்கு உதவிதொகையாக, ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை,' என, 33 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X