அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., மீது வீண் பழி
ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 'நீட் தேர்வு மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற முடியாமல், கோட்டை விட்ட வரலாற்று பிழையை மறைக்க, தி.மு.க., மீது பழி போடுவதை, அ.தி.மு.க., அரசு உடனே நிறுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., மீது வீண் பழி: ஸ்டாலின் கண்டனம்


அவரது அறிக்கை: 'நீட் நுழைவு தேர்வை கொண்டு வந்தது, காங்கிரஸ் - தி.மு.க., தான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை,

எங்கள் மீது போடுகின்றனர்' என, முதல்வர், பச்சை பொய் ஒன்றை, கொஞ்சமும் கூசாமல், திரும்ப திரும்பச் சொல்லி வருகிறார். இந்த தேர்வை முதன்முதலில் எதிர்த்தது, முதல்வர் கருணாநிதி தான். மத்தியில், ஐ.மு., கூட்டணியில் இருந்தாலும், உடனே, மத்திய சுகாதார துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திற்கு கடிதம் எழுதி, எதிர்ப்பு தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்து, நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார். தி.மு.க., ஆட்சி இருந்தவரை, நீட் தேர்வு, தமிழகத்திற்குள் நுழையவில்லை. அதுமட்டுமல்ல, ஐ.மு., கூட்டணி அரசு இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்து, உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. அ.தி.மு.க., - பா.ஜ., ஆட்சியில் தான், நீட் தேர்வு, தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

Advertisement



நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற முடியாமல், கோட்டை விட்ட வரலாற்று பிழையை மறைக்க, தி.மு.க., மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை, தமிழக அரசு உடனே நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
13-ஜூலை-201923:23:35 IST Report Abuse

தாமரை நீட் தேர்வு கட்டாயம்தான் . நீர் என்ன புலம்பினாலும் அது மாறப் போவதில்லை. மருத்துவக் கொள்ளையில் முடியாவிட்டால் வேறு ஏதாவது ஒரு கொள்ளையில் ஈடுபடுங்கள் தலைவா.

Rate this:
RAJAS - chennai,இந்தியா
13-ஜூலை-201923:17:52 IST Report Abuse

RAJAS///தி.மு.க., ஆட்சி இருந்தவரை, நீட் தேர்வு, தமிழகத்திற்குள் நுழையவில்லை/// உளறல். நீட் கொண்டு வர முடிவெடுத்தது 2013 ல் 2011 க்கு பிறகு திமுகவே பதவியில் இல்லையே.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201921:51:45 IST Report Abuse

Pugazh Vநன்றி ந.ரா.ரா.நாதன். இத்தனை பெயர்களில் அழைக்கப்படுகிறவரின் நினைப்பிலேயே அலையும் உங்களுக்கும்...பாஜகவின் வாசகர்களை ஆதரவாளர்களை அடிமைகள் என்று சொல்லாமல்... பாஜக எதிர்ப்பாளர்களை மட்டும் அடிமைகள் என்று எழுதி, சுடலையின் நினைப்பிலேயே உயிர் வாழும் டமில்சன்னுக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி. எல்லா செய்திகளிலும் சுடலையை மறக்காமல் கோர்த்து விட்டு எழுதவும். மீண்டும் நன்றி

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X