பொது செய்தி

தமிழ்நாடு

எடை தராசுகளுக்கு முத்திரையிடும் பணி

Added : ஜூலை 12, 2019
Advertisement
 எடை தராசுகளுக்கு முத்திரையிடும் பணி

கோத்தகிரி:கோத்தகிரியில் தராசுகளுக்கு முத்திரையிடும் பணி நடந்து வருகிறது.கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிகர்கள், வர்த்தக நிறுவனங்கள், மளிகை கடைகள் மற்றும் தேயிலை கொள்முதல் நிலையங்களில் உள்ள தராசுகளுக்கு முத்திரையிடும் பணி, இம்மாதம், 1ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை நடக்கிறது.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் முத்திரையிடும் பணியில் இதுவரை, 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் தங்களது தராசுகளுக்கு முத்திரையிட்டுள்ளனர்.முத்திரை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் (பொறுப்பு) கூறுகையில், ''கோத்தகிரியில் ஜூலை முதல் தேதியிலிருந்து முத்திரையிடும் பணி நடந்து வருகிறது. இப்பணி, இம்மாதம், 15ம் தேதி முடிவடைகிறது. எனவே, வணிகர்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தேயிலை கொள்முதல் நிலையங்களில் வைத்துள்ள தராசுகளுக்கு தவறாமல் முத்திரையிட்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X