பொது செய்தி

தமிழ்நாடு

அனைவரின் வீடுகளிலும் கழிப்பறை வேண்டும்

Added : ஜூலை 12, 2019
Advertisement

கூத்திரம்பாக்கம்: 'அனைத்து வீடுகளிலும், கழிப்பறை கட்ட வேண்டும்' என, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அறிவுரை வழங்கினர்.காஞ்சிபுரம் அடுத்த, கூத்திரம்பாக்கத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைதிட்ட, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.தற்காலிக ஊராட்சி தலைவர், குணசுந்தரி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சண்முகம் முன்னிலை வகித்தார்.வட்டார சமூக தணிக்கை அலுவலர், ஏகாம்பரம் பங்கேற்று, வரவு, செலவு கணக்கு வாசித்தார். அதில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். பின் நடந்த விவாதம்:கிராமவாசி: நுாறு நாள் வேலையில், சிலருக்கு வேலை செய்யாமல், பணம் சென்றுள்ளதாகவும்; வருகை பதிவேட்டில், வெள்ளை மை மீது கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றீர்கள் அது எப்படி? நாங்கள் பார்க்கும் போது வெள்ளை மை இல்லையே?சமூக தணிக்கை அலுவலர்: இதற்கு, உங்கள் பணி தளப்பொறுப்பாளரை தான் கேட்க வேண்டும். பணி தளப்பொறுப்பாளர் பதில் அளிக்கும்படி, அதிகாரிகள் கேட்ட பிறகும், அவர் மவுனம் சாதித்தார்.கிராமவாசி: இது போல, எத்தனை நபர்களுக்கு பணம் சென்றுள்ளது. விபரம் தெரிவிக்கவும்.ஊராட்சி செயலர்: தனித்தனி நபர்களின் வங்கி கணக்கில், பணம் செல்வதால், எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.சமூக தணிக்கை அலுவலர்: இது உங்கள் கிராமம், கிடைக்கும் திட்டப்பணிகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்: அனைத்து நபர்களின் வீடுகளிலும், சுகாதார கழிப்பறை கட்டி இருக்க வேண்டும். கட்டாதவர்கள் கட்டி முடியுங்கள். கட்டி முடித்தவர்கள், புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் அளித்தால், பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X