பொது செய்தி

தமிழ்நாடு

தொழுநோய் பரிசோதனை காஞ்சியில் கணக்கெடுப்பு

Added : ஜூலை 12, 2019
Advertisement
 தொழுநோய் பரிசோதனை காஞ்சியில் கணக்கெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வீடு வீடாக சென்று, தொழுநோய் பரிசோதனை கண்டறியும் பணி நடக்கிறது.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தில், வீடு வீடாக சென்று, தொழுநோய் பரிசோதனை கணக்கெடுப்பு பணி, 8ம் தேதி துவங்கியது.ஒவ்வொரு வட்டாரத்திற்கும், 22 குழுக்கள் அமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள், வீடு வீடாக சென்று, நோயாளிகளை கண்டறியும் பணியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி, திருக்காலிமேடு பாலாஜி நகரில், களப்பணியாளர்கள் நேற்று, வீடு வீடாக சென்று, தொழு நோய்க்கான அறிகுறிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டு, கணக்கெப்புநடத்தினர். வரும், 24ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறும்.தொழுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர்களுக்கு, முறையான கூட்டு மருந்து சிகிச்சை மூலம், நோய் முற்றிலும் குணப்படுத்தமுடியும் என, சுகாதார ஆய்வாளர்,சீதாபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X