பொது செய்தி

தமிழ்நாடு

154வது ஆண்டு விளையாட்டு விழா

Added : ஜூலை 12, 2019
Advertisement
 154வது ஆண்டு விளையாட்டு விழா

குன்னுார்;குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில், 154வது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.நான்கு அணிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. 'ஒலிம்பிக் டார்ச்' ஏற்றப்பட்டது. 100 மீ., ஓட்ட போட்டியில், ஜூனியரில், ராகுல், மூத்தோரில் பென்வென்ட்டோ, மிக மூத்தோர் பிரிவில் குரோசி ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 400, 100 மீ., தொடர் ஓட்டத்தில் அந்தோணியார் அணி வெற்றி பெற்றது.தடகள போட்டியில், 133 புள்ளிகள் பெற்று அந்தோணியார் அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரர் தாமஸ் செல்வம், தலைமை வகித்தார். கோவை ேஹாமியோபதி மருத்துவ கல்லூரி தாளாளர் லீமா ரோஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.மாணவர்களின் கராத்தே உட்பட பல்வேறு உடற்பயிற்சிகள் இடம் பெற்றது. கூட்டு உடற்பயிற்சியில், 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X