பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா கிடைக்க நடவடிக்கை: கைவிடப்பட்டது உண்ணாவிரதம்

Added : ஜூலை 12, 2019
Advertisement

பந்தலுார்:'பட்டா கேட்டு நடந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.எருமாடு அருகேயுள்ள வெட்டுவாடி கிராமத்தில் குடியிருந்து வரும், 363 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கிடவும், இவர்களின் அனுபவத்தில் உள்ள, 154 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தி, கடந்த இரண்டு நாட்களாக, உண்ணாவிரத போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, 'இங்குள்ள பட்டா பிரச்னைக்கு, 2 மாத்தில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற மக்கள் நடவடிக்கை மேற்கொண்டதற்கான கடிதங்களின் நகல்களை வழங்க வலியுறுத்தினர். அதனை அதிகாரிகள் ஏற்று கொண்டதால், 2 மாதம் வரை போராட்டத்தை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X