பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் உத்தரவு: 'சீல்' அகற்றம்

Added : ஜூலை 12, 2019
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில், பி.எஸ்.என்.எல்., கோபுர கட்டுப்பாட்டு அறைக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டது.கோத்தகிரியில் பி.எஸ்.என்.எல்., சேவையை தடையின்றி வழங்க, சக்தி மலைப்பகுதியில், வருவாய் துறைக்கு சொந்தமான, 33 சென்ட் நிலத்தில், கட்டுப்பாட்டு அறையுடன், 1993ல் மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டது.
இதற்கான, குத்தகை தொகை வருவாய் துறைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஒரு கோடியே, 70 லட்சத்து, 83 ஆயிரத்து 978 ரூபாய், நிலுவை வைத்திருந்து. வருவாய்துறை மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, பலமுறை 'நோட்டீஸ்' அனுப்பியும் நிலுவை தொகை செலுத்தப்படவில்லை.இதனால், அப்போதைய தாசில்தார் சங்கீதா ராணி தலைமையில், கடந்த, 27ல் வருவாய்துறையினர் பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு அறைக்கு 'சீல்' வைத்தனர். சேவை தடைப்பட்டதை அடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், சென்னை ஐகோர்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ''வாடிக்கையாளர்களுக்கு தடையில்லாமல் சேவை கிடைக்கும் பொருட்டு, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளும், வருவாய் துறையினரும் ஒருங்கிணைந்து, சென்னை தலைமை செயலரை அணுகி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
அதுவரை, பி.எஸ்.என்.எல்., சேவை தொடர ஏதுவாக, கட்டுப்பாட்டு அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும்,'' என, உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆலோசனைப்படி, கோத்தகிரி தாசில்தார் மோகனா தலைமையில், வி.ஏ.ஓ., லதா உள்ளிட்ட வருவாய் துறையினர் முன்னிலையில், பி.எஸ்.என்.எல்., கட்டுப்பாட்டு கோபுர அறைக்கு வைக்கப்பட்ட 'சீல்' அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X