பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்கள் விழிப்புணர்வு

Added : ஜூலை 12, 2019
Advertisement

பொன்னேரி: 'நீர்நிலைகளில், குப்பை கழிவுகளை கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்' என, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து, கல்லுாரி மாணவர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மத்திய உவர்நீர் ஆராய்ச்சி மையம் மற்றும், சி.பி.சி.எல்., நிறுவனம் இணைந்து, பொன்னேரி அடுத்த செஞ்சியம்மன் நகர், கணவான்துறை ஆகிய கிராமங்களில், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை குறித்து, அங்குள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தின.சென்னை, லயோலா கல்லுாரி மாணவர் அரவணைப்பு மையத்தின், கலை மற்றும் இலக்கிய பிரிவு மாணவர்கள் தப்பாட்டம், ஒயிலாட்டம், நாடகம் ஆகியவற்றின் மூலம், கிராமவாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கிராமங்களில், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது, நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது; பசுமையான கிராமமாக மாற, மரம் வளர்க்க வேண்டும் என, வலியுறுத்தினர்.இதில், மத்திய உவர்நீர் ஆராய்ச்சி மையத்தின் தலைவர், சாய்ராம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி, சி.பி.சி.எல்., நிறுவன அதிகாரி வெங்கடேஸ்வரலு, சென்னை லயோலா கல்லுாரி பேராசிரியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X