பொது செய்தி

தமிழ்நாடு

இலவசமாக மரக்கன்று வழங்குது பேரூராட்சி

Added : ஜூலை 12, 2019
Advertisement

அவிநாசி:அவிநாசி பேரூராட்சி சார்பில், இயற்கை உரம் பயன்படுத்தி, மரக்கன்று வளர்க்கப்பட்டுள்ளது. அவை, பொதுமக்களுக்கு, இலவசமாக வழங்கப்பட உள்ளது.தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பை மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. முதல்வராக ஜெ., இருந்த போது ஊக்குவிக்கப்பட்ட, மழைநீர் சேகரிப்பு, நாளடைவில் பராமரிப்பின்றி விடப்பட்டது. அக்கட்டமைப்பு, மீண்டும் துாசு தட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மழை வளம் பெருக உதவும், மரம் வளர்ப்புக்கு ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவிநாசி பேரூராட்சி சார்பில், குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கும், வளம் மீட்பு பூங்காவில், மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.வேம்பு, புங்கன், மகிளம், சீனி புளியங்காய், அத்தி, ஆலமரம் உட்பட, 10 வகை மர வகைகள் வளர்க்கப்பட்டுள்ளன. தற்போது, 300 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. நேற்று முதல், அவற்றை பொதுமக்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் இலவசமாக வழங்க துவங்கியிருக்கிறது.''பொதுமக்கள், தன்னார்வ அமைப்பினர், பள்ளி, கல்லுாரி உட்பட கல்வி நிறுவனத்தினர், மரம் வளர்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கி, மழை வளம் பெருக உதவி புரிய வேண்டும்'' என, பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X