பதிவு செய்த நாள் :
அவதுாறு வழக்கில்
ராகுலுக்கு, 'ஜாமின்'

ஆமதாபாத்: ஆமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த அவதுாறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, ஆமதாபாத் நீதிமன்றம், 'ஜாமின்' வழங்கியது.

அவதூறு,  ராகுல், ஜாமின், விஜய் ரூபானி,ஆமதாபாத் கூட்டுறவு வங்கி


குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குனர் குழுவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார்.

கடந்த, 2016ம் ஆண்டில், '500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, மத்திய அரசு அறிவித்தது. பொது மக்கள், தங்களிடம் உள்ள, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, அவகாசம் அளிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு:


'அமித் ஷா இயக்குனராக உள்ள, ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில், ஐந்து நாட்களில், 750 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், 'டிபாசிட்' செய்யப்பட்டன. 'பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் நடந்த, மாபெரும் ஊழல் இது' என, காங்., தலைவர் ராகுல், காங்., செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, ஆமதாபாத் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைவர் அஜய் படேல் சார்பில், ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ராகுல் மற்றும் சுர்ஜேவாலாவுக்கு எதிராக, கிரிமினல் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.கே.கத்வி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, இருவருக்கும், 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், ஆமதாபாத் நீதிமன்றத்தில், ராகுல் நேற்று ஆஜரானார். விசாரணைக்கு பின், 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஜாமின் பெற்றுக் கொள்ள, ராகுலுக்கு, மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். இதையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ராகுல் ஜாமின் பெற்றார்.

Advertisement

முன்னதாக, நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள அவதுாறு வழக்கை எதிர்கொள்ள, ஆமதாபாத் வந்துள்ளேன். என் மீது, அடுத்த வழக்கு தொடர, அரசியல் எதிரிகளான, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தயாராக உள்ளன.

உண்மை வெல்லும்:


மக்களுக்காக, சித்தாந்த ரீதியாக போராட, எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளதற்காக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மை வெல்லும். பண பலம் மற்றும் ஆட்கள் மூலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசை கவிழ்க்க, பா.ஜ., முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (6+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Elumalai - Chennai,இந்தியா
13-ஜூலை-201920:11:34 IST Report Abuse

C.Elumalaiவாழ்க்கையே ஜாமீன்,ஜாமீனே வாழ்க்கை, ஆகிவிட்டது பப்புலூக்கு.குடும்பமே ஜாமீன், குடும்பம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூலை-201915:45:18 IST Report Abuse

Endrum Indianஅப்போ இனி வாரத்துக்கு ஒரு ஜாமீன் வாங்குவதே ராவுல் வின்சியின் தலையாய வேலை என்று தெரிகின்றது.

Rate this:
blocked user - blocked,மயோட்
13-ஜூலை-201909:38:29 IST Report Abuse

blocked userஜாமீன் வாங்குவது இப்பொழுது பப்புவின் முழுநேர வேலை.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X