பொது செய்தி

தமிழ்நாடு

'சர்வர்' முடக்கம்; பதிவுப்பணி ஸ்தம்பிப்பு: விவசாயிகள் கடும் குற்றச்சாட்டு

Added : ஜூலை 12, 2019
Advertisement

திருப்பூர்:சர்வர் முற்றிலும் முடங்குவதால், அடிக்கடி பத்திரப்பதிவு அலுவலக பணிகள் ஸ்தம்பித்துவிடுவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழக அரசின் மின்னாளுமை திட்டத்தால், பல்வேறு அரசுத்துறைகளும், புதிய தொழில்நுட்ப உதவியுடன் இயங்குகின்றன. முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, 'ஆன்லைன்' மூலமாகவே பணிகள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களாக, பத்திரப்பதிவு பணிகளும், 'ஆன்லைன்' மூலமாக நடக்கின்றன.இருப்பினும், முற்றிலும் சர்வர்ரை மட்டுமே நம்பியுள்ளதால், அடிக்கடி பணி பாதிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொது சேவை மைய பணிகள் முடங்கும் போது, ஒட்டுமொத்த பதிவுப்பணியும் முடங்கிவிடுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பரமசிவம் வெளியிட்டுள்ள அறிக்கை:பதிவுத்துறையில், 'ஆன்லைன்' பதிவுமுறை அமலுக்கு வந்த பிறகு, மக்களின் சிரமம் குறைந்துள்ளது. இருப்பினும், தனியார் நிறுவனம் மூலமாக, 'சர்வர்' பராமரிக்கப்படுகிறது.
பதிவுப்பணி முழுவதும், சர்வர் இருந்தால் மட்டுமே நடக்கிறது; பல்வேறு அலுவலகங்கள், சர்வரை மட்டுமே நம்பியுள்ளன.இருப்பினும், 'சர்வர்' சேவை சரிவர கிடைப்பதில்லை. பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, திருமண பதிவு, ஒப்பந்த பதிவு போன்ற எவ்வித பணிகளையும் செய்ய இயவில்லை. சர்வர் இல்லாமல், எவ்வித பணியும் நடக்கவில்லை; பொதுமக்களுக்கு சரியான பதிலும் கிடைப்பதில்லை. தமிழக அரசு, அனைத்து அரசு சேவைகளுக்கும், தடையின்றி, 'சர்வர்' சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X