பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம்

Added : ஜூலை 12, 2019
Advertisement

பொள்ளாச்சி,:வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு, 20 மூட்டைகளில் கொப்பரை கொண்டு வரப்பட்டது.ஏலத்துக்கு, விற்பனைக்கூட மேற்பார்வையாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். ஏலத்தில், 10 மூட்டைகளில் இருந்த முதல் தர கொப்பரை கிலோ, ரூ.65.15 முதல், 80.15 வரை விற்பனையானது. இரண்டாம் தர கொப்பரை, 10 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 45 முதல், ரூ.65.25க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட, 10 மூட்டை கொப்பரை வரத்து குறைந்திருந்தது. விலையும், கிலோவுக்கு, ரூ.2.20 குறைந்தது.பருவமழை தீவிரமடைந்ததால், தேங்காய் உடைப்பு மற்றும் கொப்பரை உலர வைத்தல் பணிகள் முடங்கியதால், ஏலத்துக்கு வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X