பொது செய்தி

தமிழ்நாடு

அச்சுவார்ப்பு முறையில் இயற்கை உரம் தயாரிப்பு: நகராட்சியை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 12, 2019
Advertisement
 அச்சுவார்ப்பு முறையில் இயற்கை உரம் தயாரிப்பு: நகராட்சியை அணுக விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் மக்கும் குப்பையை உரமாகவும், எரிபொருளாக பயன்படுத்தும் வகையில், 'அச்சுவார்ப்பு' மற்றும், 'வரட்டி' முறை பின்பற்றப்படுகிறது. தேவைப்படுவோர் நகராட்சி சுகாதாரதுறையை அணுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில், திடக்கிழவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து, இயற்கை, மண்புழு உரங்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது.நுண் உரமாக்கல் மையங்கள் மூலமாக தொட்டிகள் கட்டப்பட்டு, சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரித்து, மக்கும் குப்பை இயந்திரங்கள் மூலமாக அரைத்து, உலர வைக்கப்படுகின்றன. இந்நிலையில், குறைந்த செலவில் பாரம்பரிய முறைப்படி சாணி தட்டுதல் எனப்படும் வரட்டி முறை, அச்சுவார்ப்பு முறையில், உரம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், தர்மராஜ், சீனிவாசன், ஜெயபார்வதி குழுவினர் முன்னிலையில், சுகாதாரப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:இயந்திரங்கள் மூலம் மக்கும் குப்பை அரைக்கப்பட்டு, தொட்டியில் கொட்டப்பட்டு, உரமாக்கப்படுகின்றன. விரைவில் உரமாக்க, பொருளாக மாட்டு சாணம் அல்லது இ.எம்.எஸ்., கரைசல் பயன்படுத்தப்படுகிறது.மொத்தம், 100 லிட்டர் கலவை தயாரிக்க, 500 ரூபாய் செலவாகிறது. இ.எம்.எஸ்., கலவை பயன்படுத்தினாலும், சில நேரங்களில், உரமாக, 120 நாட்களுக்கு மேலாகிறது.பணியாளர்கள் பற்றாக்குறையான சூழலில், கூடுதல் சுமையாகிறது. உரம் தயாரிப்பு செலவை விட குறைவான விலைக்கோ அல்லது இலவசமாகவோ கொடுக்க வேண்டியதுள்ளது. இதற்கு மாற்றாக, பாரம்பரிய முறையான வரட்டி தயாரிக்கும் முறையை பின்பற்றி, குறைந்த செலவில் எரிபொருளாகவும், உரமாகவும் பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இயந்திரம் மூலம் குப்பையை அரைத்து உலர வைத்து பயன்படுத்தும் திட்டம் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கும் குப்பையை அரைத்து உலர வைப்பதால் விரைவாக பயன்படுத்த முடியும். இதனால், குப்பை தேங்கும் நிலை இல்லை; துர்நாற்றம் ஏற்படாது.பணிச்சுமை மற்றும் பணி நேரம் குறையும். குறைவான பணியாளர்கள் பயன்படுத்தினால் போதும். இதை எரிபொருளாகவும், உரமாகவும் விற்பனை செய்வதால், இரண்டு வகையில் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.எரிபொருளாக பயன்படுத்தும் போது, அதிக கலோரி கிடைப்பதோடு நல்ல எரிபொருளாகிறது. உரமாக பயன்படுத்தும் போது, ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்கிறது. சத்துக்களை தருவதோடு, கொஞ்சம், கொஞ்சமாக மக்கி உரமாகி அதிக நாட்கள் சத்துக்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.இதை, அச்சு வார்ப்பு முறையில் தயாரிக்கும் போது விருப்பத்திற்கேற்ப வடிவத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்த முறையில், அழுத்தம் தரும்போது, கசிவு நீரில் சத்துக்கள் நிறைந்து இருப்பதால், தாவரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதை கொண்டு, 'பயோ காஸ்' தயாரிக்க முடியும்.கெட்டுப்போன உணவு பொருட்கள் கலந்திருப்பதால் கையுறை, காலுறை, சுவாச பாதுகாப்பு, சாதனம் பயன்படுத்த வேண்டும். இத்திட்டம் நல்ல வரவேற்பு பெற்றால், தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X