பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வலிமையானது!
'ரபேல் - சுகோய்' போர் விமானங்கள் கூட்டணி...
பாக்., சீனாவுக்கு துணை தளபதி எச்சரிக்கை

பாரீஸ்: ''இந்திய விமானப்படையில், விரைவில், 'சுகோய் ' போர் விமானங்களுடன், 'ரபேல்' போர் விமானமும் இணைய உள்ளது. இந்த கூட்டணி மிகவும் வலிமையானது; இவை இணைந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உட்பட, எந்த நாடுகளாலும் சமாளிக்க முடியாது,'' என, விமானப்படை துணை தளபதி, ஆர்.கே.எஸ்.பதவுரியா எச்சரித்துள்ளார்.

ரபேல் - சுகோய்,துணை தளபதி, எச்சரிக்கை,போர் விமானங்கள், கூட்டணி


ஐரோப்பியா நாடான பிரான்சின் விமானப்படையுடன், இந்திய விமானப்படை இணைந்து, கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. பிரான்சின், மான்ட் டீ மார்சன் நகரில் நடக்கும் இந்த கூட்டுப் பயிற்சிக்கு, 'கருடா' என, பெயரிடப்பட்டது. பயிற்சியில், 'சுகோய், ரபேல், மிராஜ்' உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்றன.

ஆற்றலுடையது:


இந்த பயிற்சியில், இந்திய விமானப்படை துணை தளபதிகள் உட்பட, உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். பயிற்சியின் கடைசி

நாளான நேற்று, விமானப்படை துணை தளபதி பதவுரியா, பிரான்சிடமிருந்து வாங்கப்பட உள்ள, ரபேல் போர் விமானத்தில் பறந்து, பயிற்சியில் ஈடுபட்டார்.

இதன்பின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது: இந்திய விமானப்படையில் இடம்பெற்றுள்ள, 'சுகோய் சூ-30 எம்.கே.ஐ.,' போர் விமானங்களை, இந்தியாவின் 'ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்' நிறுவனம் மற்றும் ரஷ்யாவின், 'சுகோய் நிறுவனம்' ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட, சுகோய் போர் விமானங்கள், ஒரே நேரத்தில், எதிரிகளின் இரு வேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை. விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள, சுகோய் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை, இந்தியா வாங்க உள்ளது. இதன், முதல் விமானம், செப்டம்பரில், விமானப்படையில் சேர்க்கப்படும்.இந்திய விமானப்படைக்கு, சுகோய் போர் விமானம் பெரும் வலிமை சேர்த்துள்ளது. இதோடு, ரபேல் விமானமும் சேர்க்கப்பட்டால், விமானப்படை பெரும் வலிமை பெற்றுவிடும்.

Advertisement

ரபேல் - சுகோய் போர் விமானங்கள் இணைந்து செயல்பட்டால், அதை நம் எதிரிகளால் சிறிதும் சமாளிக்க முடியாது. பாகிஸ்தான் உட்பட எந்த நாட்டுக்கும், ரபேல் - சுகோய் கூட்டணி, பெரும் சவாலாக இருக்கும்.

ஊடுருவல்:


பிப்., 27ல், இந்திய எல்லைக்குள், பாக்., போர் விமானம் ஊடுருவியது. அது, விரட்டியடிக்கப்பட்டது. பாகிஸ்தான், மீண்டும் அதுபோல் செயல்பட்டால், பெரும் இழப்பு களை சந்திக்க வேண்டியிருக்கும். 'கருடா' பயிற்சி, நம் விமானப்படைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. ரபேல் போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் பெற்றுள்ளோம். 36 ரபேல் விமானங்களும் சேர்க்கப்பட்ட பின், உலகில் வலிமைமிக்க விமானப்படை உள்ள நாடாக, இந்தியா திகழும். இவ்வாறு பதவுரியா கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூலை-201917:02:52 IST Report Abuse

ஆப்புகூடவே ரஷ்ய ஏவுகணைகள், அமெரிக்க ஹெலிகாப்டர்கள், இஸ்ரேலிய வெடி குண்டு கணைகள்னு....போற இடத்திலிருந்து வாங்கிட்டு வந்திருவாரு.

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
13-ஜூலை-201910:30:22 IST Report Abuse

 nicolethomsonவாழ்த்துக்கள்

Rate this:
blocked user - blocked,மயோட்
13-ஜூலை-201909:59:19 IST Report Abuse

blocked userபோதுமான விமானங்களை வாங்க ஆவண செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு வெட்டிக்கதை பேசி பிரயோஜனம் இல்லை. இராணுவத்தகவல்களை பொது வெளியில் பகிர்ந்து கொள்வதை நிறுத்துவது நல்லது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X