பொது செய்தி

தமிழ்நாடு

தேவம்பாடி குளத்தை சீரமைக்க விவசாயிகள் தீவிர ஆலோசனை

Added : ஜூலை 12, 2019
Advertisement

பொள்ளாச்சி:தேவம்பாடி குளம் சீரமைப்புக்கு, குடிமராமத்து திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்துள்ள, 15 லட்சம் ரூபாயில், கரையை பலப்படுத்தி, மதகுகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பாசன சங்க விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், தேவம்பாடி கிராமத்தை ஒட்டி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 64 ஏக்கர் பரப்பளவிலான குளம் அமைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், குளத்தின் குடிமராமத்து பணிக்காக, 15 லட்சம் ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை கொண்டு குளக்கரையை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, தேவம்பாடி குளத்து நீரை பயன்படுத்துவோர் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் ரகு தலைமை வகித்தார். பி.ஏ.பி., செயற்பொறியாளர் ராஜன் பங்கேற்றார்.விவசாயிகள் பங்களிப்போடு, குளத்துக்கு நீர் வரும் வரத்து கால்வாயை பராமரித்து, கால்வாயின் இரு பக்கமுள்ள, கான்கிரீட் சுவர்களை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது.சமீபத்தில் பொறுப்பேற்ற, 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு, பாசன சபை விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர். சங்கத்தின் செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X