பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை ஒருவாரத்தில் சீரமைக்க வேண்டும்

Added : ஜூலை 12, 2019
Advertisement

தேனி : ''அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பை ஒருவாரத்தில் சீரமைக்க வேண்டும்,''என, கலெக்டர் பல்லவி பல்தேவ் வலியுறுத்தினார்.

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது. கலெக்டர் தலைமை வகித்து தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தொடுதிரையை அப் பள்ளிக்கு வழங்கினார். அவர் பேசியதாவது:மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரை வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகுக்காது. தீய பழக்க வழக்கங்கள் இன்றி, ஒழுக்கத்துடனும், சிந்திக்கும் திறனுடனும் செயல்பட மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்திட வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரியரும் தன் மாணவரின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து செயல்பாடுகள், தனித்திறன்களை கண்டறிந்து அகற்கேற்ப கல்வி கற்க செய்திட வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளதை ஒருவாரத்தில் சீரமைத்து தயார் நிலையில் வைத்திட வேண்டும்'', என்றார்.

மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி, முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், சப்- கலெக்டர் நிறைமதி (பயிற்சி), உதவித்திட்ட அலுவலர் சிவானந்தன், அரசு மன நல டாக்டர் ராஜேஸ், ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, 150 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னதாக கலெக்டரின் காரை வழிமறித்த செங்கதிர் இயக்கத்தினர் , பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை எனக் கோரிக்கைமனு அளித்தனர். விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X