பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சரியான திட்டமிடல், மதிப்பீடு உடைய பட்ஜெட்!
ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

புதுடில்லி: ''பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவோம். அதற்கான நிதி ஆதாரங்கள், வரிகள் மூலம் திரட்டப்படும். சரியான திட்டமிடல் மற்றும் மதிப்பீடுகளின்படி தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜெட் இது,'' என, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட், திட்டமிடல், நிர்மலா,வங்கிக்கணக்கு


பட்ஜெட் விவாதங்களுக்கு பதிலளித்து, ராஜ்ய சபாவில் நேற்று, நிதிஅமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசியதாவது: அனைத்து செலவினங்களுக்கும், குறிப்பாக, ராணுவத்தினரின் பென்ஷன், சம்பளம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு, போதுமான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செலவினங்களை எதிர்கொள்ளத் தேவையான, வரி மற்றும் வரியில்லாத வழிகளும் இதில் கண்டறியப்பட்டுள்ளன. நாட்டின் நிதிநிலையை ஸ்திரமாக வைத்திருப்ப தில் எந்த சமரசமும் இன்றி, முதலீட்டை ஊக்குவிக்கும் அம்சங்கள், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

ஊக்கம் கிடைக்கும்:


இந்த பட்ஜெட், எதிர்க்கட்சிகள் கூறுவது போல, 'திட்டமிடப்படாத பட்ஜெட்' அல்ல. முறையாக திட்டமிட்டு, எட்டப்படக் கூடிய மதிப்பீடுகளுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட். நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள பட்ஜெட். விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நேரடி அன்னிய முதலீடு அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 400 கோடி ரூபாய்க்குள் வரும் நிறுவனங்களின் வரியை, 25 சதவீதமாக குறைத்து உள்ளோம்.

எலக்ட்ரிக் வாகனங்கள், சில்லரை வியாபாரிகள் மற்றும் தெருவோர கடைக்காரர்களுக்கு பென்ஷன் போன்ற திட்டங்கள் உள்ளன. உள்கட்டமைப்பு திட்டத்திற்கு, ௧௦௦ லட்சம் கோடி ரூபாயை, அடுத்த, ஐந்தாண்டுகளில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளோம். பொருளாதார முன்னேற்றத்திற்காக, சில கச்சா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளோம். இதன் மூலம், 'இந்தியாவில் தயாரிப்பு' திட்டத்திற்கு உத்வேகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிதியுதவி, முதலீட்டை மேம்படுத்த, பிரதமர் தலைமையில், ஐந்து உறுப்பினர் கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


வருமான வரி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கலால் வரியில்

Advertisement

நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகள் எட்டப்படக் கூடியவை. பெட்ரோல், டீசல் மீதான, லிட்டருக்கு, 2 ரூபாய் கலால் வரியால், பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். ஜி.எஸ்.டி., வரி, 14 சதவீத உயர்வை எட்டும். எந்தவித வலுவான சீரமைப்புகளும் இல்லை என கூறப்படுவதை மறுக்கிறேன். வங்கித்துறை சீரமைப்பிற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் துறையில் மட்டுமே, குறிப்பிடத்தக்க, 16 முக்கிய சீரமைப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

நிதியுதவி:


அவற்றில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்துதல், வங்கிகளுக்கு அரசின் நிதியுதவி போன்றவற்றை குறிப்பிடலாம். நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், பணவீக்கம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதுவே, மிகப் பெரிய சாதனை. நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவோம். இவ்வாறு, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201922:41:51 IST Report Abuse

Pugazh VGDP க்கும் ஊழலுக்கும் ஒரு புண்ணாக்கும் சம்பந்தம் கிடையாது. உதாரணமாக விவசாய த் துறையில் ஊழல் இல்லை என்றால் அரிசி நிறையவா விளையும் அல்லது வாகனத் தொழில் துறையில் ஊழல் இல்லை என்றால் கார் பஸ் பைக் உற்பத்தி கூடவா போகிறது??

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201922:37:35 IST Report Abuse

Pugazh VActually he didn't understand Indian economy, as FM too. The isang budget has given Tax relief of ₹ 3000 crores for 4000 pvt companies. But the scheme should hv been planted in budget, so that this ₹3000 crores reach common public.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201922:34:58 IST Report Abuse

Pugazh VWhy uthapa always writes nonsense things and always against TN people only. There are people in other States also, who hates bjp and who are against this budget. Why I thappa targets only tamils???

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X