பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு படுகையில் நெல் விதைப்பு துவக்கம்! தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து காத்திருப்பு

Added : ஜூலை 13, 2019
Advertisement
 ஆழியாறு படுகையில் நெல் விதைப்பு துவக்கம்! தண்ணீர் திறப்பை எதிர்பார்த்து காத்திருப்பு

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமென்ற நம்பிக்கையில், விவசாயிகள் நெல் சாகுபடியை துவங்கி உள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கால், பெரியணை, வடக்கலுார் ஆகிய, ஐந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மே, 15 முதல் ஏப், 15ம் தேதி வரை, 11 மாதங்களுக்கு, குறுவை மற்றும் சம்பா ஆகிய, இரண்டு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்குவது வழக்கம்.ஒரு போகத்தில், நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யும், 6,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வறட்சி காரணமாக, அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், 2016, 2017ல் தலா, ஒரு போக சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. 2018ல் இரண்டு போகத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. நடப்பாண்டுக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் உள்ளதால், ஆழியாறு அணையின் நீர் மட்டம் இன்னமும் உயராமல் உள்ளது.விவசாயிகள் முதல் போக குறுவை பட்ட நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.இந்நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமென்ற நம்பிக்கையில், ஆனைமலை அடுத்த வெப்பரைப்பதி அருகே விவசாயிகள், நெல் விதைகள் நடவு செய்து முதல் போக நெல் சாகுபடியை துவங்கியுள்ளனர்.விவசாயி பட்டீஸ்வரன் கூறியதாவது:நடப்பாண்டுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம்.
மாவட்ட கலெக்டர் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து உள்ளார். தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால், நடப்பாண்டு முதல் போகத்துக்கு, 20 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய திட்டமிட்டு உள்ளேன். இதற்காக 'ஏ.எஸ்.டி 37' வகை நெல் விதைகள், புழுதி நாற்றாங்கால் முறையில் விதைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, ஆழியாறு அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறந்து, அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, விவசாயி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X