இந்தியாவுக்கு பாக்., 'பூச்சாண்டி'

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இஸ்லாமாபாத்: 'விமானப்படை தளங்களில், தயார் நிலையத்தில் வைத்துள்ள போர் விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, எங்கள் வான் எல்லை திறக்கப்படாது' என., பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.






ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், பிப்., 14ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை, நம் விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள், பிப்., 26ல், குண்டுகள் வீசி அழித்தன.

இதில், 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில், இந்திய விமானங்கள் பறக்க, பாகிஸ்தான் தடை விதித்தது. பாக்., விமானங்கள், இந்திய பகுதியில் பறக்க, இந்தியாவும் தடை விதித்தது. மே மாதம், கிர்கிஸ்தானில் நடந்த, 'பிஸ்கெக்' மாநாட்டில் கலந்து கொள்ள, தங்கள் நாட்டு வான் பகுதி வழியாக செல்ல, பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. ஆனால், பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியாக விமானத்தில் செல்வதை தவிர்த்துவிட்டார்.





இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செயலர், ஷாருக் நுஸ்ரத், அந்தநாட்டின் பார்லி., நிலைக்குழுவிடம் கூறியதாவது: இந்தியாவின் விமானப்படை தளங்களில், பாகிஸ்தானை நோக்கி, போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த விமானங்களை, இந்தியா அகற்றாதவரை, அந்நாட்டுக்கு, நம் வான் பகுதியை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.





பாக்., வான்பகுதியை திறந்து விடுமாறு, இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் நிலை, இந்தியாவிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. பாக், விமானங்கள், இந்திய வான்பகுதியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை.இந்திய வான்பகுதி திறக்கப்படாததால், தாய்லாந்துக்கும், மலேஷியாவுக்கும், பாகிஸ்தான் விமானங்கள் செல்வது, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

'பாகிஸ்தான் வான்பகுதி திறக்கப்படாத நிலை யில், விமானங்கள் மாற்றுப் பாதையில் பறப்பதால், 'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு, 430 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகியுள்ளது' என, விமான போக்குவரத்து அமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று முன்தினம், லோக்சபாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201902:50:14 IST Report Abuse
TAMILAN பாகிஸ்தானை சொல்லியே எத்தனை காலம் ஓட்டுவீர்கள். ஒரு சிறிய நாட்டை எதிர்ப்பதில் ஏன் அனைவரும் மும்முரம். ஏனென்றால் வட நாடு ஓட்டு வாங்கி. சீனாவை பற்றி பேசுங்கள் பார்க்கலாம், அட சீனாவை போல் உள் நாடு உற்பத்தியை பேருக்கும் வழி பற்றி பேசுங்கள். மானகெட்டவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
13-ஜூலை-201917:46:50 IST Report Abuse
SENTHIL NATHAN பெரும்பான்மையானவர்கள் மோடியை எதிர்ப்பதில்,,,
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
13-ஜூலை-201912:41:29 IST Report Abuse
Rajavelu E. பொய் சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டா சின்னதா ஏன் சொல்றிங்க, சும்மா பெரிய பொய்யா அடிச்சுவிடுங்க. ஏலெக்ஷன் தான் முடிஞ்சிடுச்சே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X