பொது செய்தி

தமிழ்நாடு

முல்லைப்பெரியாற்று பாலச்சுவரை சீரமைக்க நிதி

Added : ஜூலை 13, 2019
Advertisement

தேனி : அரண்மனைப்புதுார் முல்லையாற்றுப் பாலத்தின் சுவர்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து ' தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தின் சுவர்களையும், கொடுவிலார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரெங்கபுரம் கிராமத்தில் கழிவுநீரோடையுடன், நெடுஞ்சாலைத்துறை கழிவுநீரோடையை கட்டி இணைக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கியுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு தேனி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன.

கண்ணன் கூறுகையில் முல்லையாற்றுப் பாலம் சென்டர் மீடியன், ஓரங்களில் உள்ள கைப்பிடிச்சுவர் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைக்கவும், ஸ்ரீரெங்கபுரத்தில் 200 மீட்டரில் கழிவுநீரோடையை கட்டமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரெங்கபுரத்தில் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் முல்லையாற்று பாலத்தில் பணிகள் துவங்க உள்ளன'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X