பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நட வேண்டும்

Added : ஜூலை 13, 2019
Advertisement

உத்தமபாளையம் : ''சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்,''என, உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லுாரியில் நடைபெற்ற சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில், தாளாளர் எம்.தர்வேஷ்முகைதீன் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கல்லுாரியின் தாவரவியல் துறை மற்றும் சுற்றுப்புறச்சூழல் மன்றம் இணைந்து, சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு, மரக்கன்று நடும் விழா நடத்தியது. கல்லுாரியின் முதல்வர் கைச். முகமதுமீரான் தலைமை வகித்தார். தாவரவியல் துறை பேராசிரியை மாஜிதாபேகம் முன்னிலை வகித்தார். சுற்றுப்புறச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரஷீதாபானு வரவேற்றார். மரக்கன்று நடவு செய்து கல்லுாரியின் தாளாளர் எம்.தர்வேஷ்முகைதீன் பேசுகையில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்பது இன்றைக்கு மனிதகுலத்திற்கு ஒரு சவாலான காரியமாகவே உள்ளது.

நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை, அதற்கேற்ப அதிகரிக்கும்தேவைகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை, சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும், மரக்கன்று நடுவது பிரதானமானதாக கருதப்படுகிறது. நாம் சுவாசிப்பதற்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன், காற்றின் மூலம் கிடைக்கிறது. எனவே மாணவர்கள் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவதிற்கு இணையாக சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் மரக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும், என்றார். தமிழ்த்துறை தலைவர் அப்துல்சமது, சுற்றுப்புறச்சூழலின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X