பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மருந்து நிறுவனங்களிடம், 'கைநீட்டினால்'
டாக்டர்களுக்கு தண்டனை

புதுடில்லி: 'மருந்து நிறுவனங்களிடம் இருந்து டாக்டர்கள் பரிசு அல்லது பணம் பெறுவது, முறைகேடானது; அது, மருத்துவ நெறிமுறைகளுக்கும் எதிரானது' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

doctor,டாக்டர்,மருந்து நிறுவனம்,medicine,சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன்


லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: தங்களின் தயாரிப்பு மருந்துகளை விற்பதற்காக, சில நிறுவனங்கள், டாக்டர்களுக்கு பரிசு, பணம், போக்குவரத்து செலவு, ஓட்டலில் தங்க வசதி மற்றும் சில சலுகைகளை அளிப்பதாக கூறப்படுகிறது. இது, மருத்துவ நெறிமுறைகளின் கீழ், முறைகேடானது.

இது தொடர்பாக, மத்திய அரசுக்கு, பல புகார்கள் வந்துள்ளன. இத்தகைய முறைகேடான செயலில் ஈடுபடும், மருந்து நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள்,

இதற்கு பொறுப்பேற்க நேரிடும். மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசு, பணம் அல்லது சலுகைகளை எந்த டாக்டராவது பெற்றுள்ளார் என்ற தகவல் தெரிந்தால், மத்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநிலங்களில் உள்ள மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள், அந்த டாக்டர்களுக்கு தண்டனை வழங்கலாம். அதுபோல, டாக்டர்களுக்கு அன்பளிப்பு அல்லது பண வெகுமதி வழங்கும் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய மருந்துகள் துறைக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

நலிவடைந்தோருக்கு 4,800 இடங்கள்:


'பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த, 4,800 பேருக்கு, இந்த ஆண்டு, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது' என, சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் கூறினார்.

லோக்சபாவில் அவர் கூறியதாவது: இரண்டாண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது, எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவம் படிப்பதற்கான இடங்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து, 698 அதிகரித்துள்ளது. நடப்பு, 2019 - 20ம் ஆண்டில், 10 ஆயிரத்து, 565 இளம்கலை மருத்துவம்,

Advertisement

2,153 முதுகலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் கூடியுள்ளன. 'நீட்' தேர்வு எழுதுவதன் மூலம், 75 ஆயிரம் மாணவர்கள், மருத்துவம் படிக்க தேர்வாகின்றனர். இவ்வாறு, அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

19.42 லட்சம் டாக்டர்கள்:

'நாட்டில் மொத்தம், 19.42 லட்சம் டாக்டர்கள் உள்ளனர்' என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் கூறியதாவது: 'அலோபதி' எனப்படும் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை பின்பற்றும், 19.47 லட்சம் டாக்டர்கள் உள்ளனர். இவர்களில், 11 லட்சத்து, 59 ஆயிரத்து, 309 பேர், அலோபதி டாக்டர்கள். நாட்டின் மக்கள்தொகையில், 1,456 பேருக்கு, ஒரு டாக்டர் உள்ளார். ஆனால், உலக சுகாதார அமைப்பு, 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என, தெரிவிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜூலை-201921:38:48 IST Report Abuse

தமிழ் மைந்தன்சாராய கம்பெனி ஆலை அதிபர்களின் கல்லூரி என்பது தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இனி அப்படி அழைக்க வேண்டாம்.......திமுகா கம்பெனியின் கிளை நிறுவனங்கள் என அழைக்கவும்.....நன்றி

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13-ஜூலை-201917:37:27 IST Report Abuse

BoochiMarunthuஅப்போ பிஜேபி கார்பொரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெருகிறதே அது முறை கேடு இல்லையா ? நீங்கள் வாங்கும் பணத்திற்கு திரும்ப காண்ட்ராக்ட் கொடுத்து வளர்த்து விடுவது ஊழல் இல்லையா ?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201914:01:20 IST Report Abuse

Pugazh Vஇந்த செய்தி யையும் அரசியல் பார்வையில் அரூராங் விமர்சிக்கறார். அனாவசியம். சாராய கம்பெனி காரர் காலேஜ் ஆரம்பித்தால் ஏன் பிள்ளைகளை சேர்க்கிறீர்கள்? அவங்க கட்சி அனுமதி குடுத்து ஆரம்பிச்சதாவே இருக்கட்டும். உங்க கட்சி கைல ஆட்சி வந்ததும் அந்த காலேஜின் அங்கீகாரத்தை ரத்து பண்ணி இழுத்து மூடியிருக்கலாமே? ஏன் அங்கீகாரம் தொடர்கிறது? சும்மா எல்லா நியூஸையும் அரசியலாகவே படித்து எழுதுவது ஒருவித அப்ஸெஷன் அல்லது அடிக்ட். இந்த மனநிலை யிலிருந்து வெளியே வாருங்கள் ப்ளீஸ். நன்றி

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13-ஜூலை-201917:39:22 IST Report Abuse

BoochiMarunthu, உங்களுக்கு புரிய இன்னும் 10 வருஷம் கூட ஆகலாம் . ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X