வெடிகுண்டு சிறுவன் தாக்குதலில் 5 பேர்பலி

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement

காபூல்:ஆப்கனில், திருமண வீட்டில், 13 வயது சிறுவன், வெடிகுண்டாக மாறியதில், ஐந்து பேர் உடல் சிதறி பலியாகினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெற்காசிய நாடுகளில் ஒன்றான, ஆப்கனில், நீண்ட காலமாக, தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. 20 -25 ஆண்டுகளுக்கு முன், அல் - குவைதா பயங்கரவாதிகளும், அங்கு சேர்ந்து கொண்டனர். இவர்களுடன், கடந்த சில ஆண்டுகளாக, ஐ.எஸ்., பயங்கரவாதிகளும் ஐக்கியமாகி உள்ளனர். இதனால், அந்த நாடே, ரணகளமாக மாறியுள்ளது.
பயங்கரவாத செயல்களில், இளைஞர்களே பெரும்பாலும் ஈடுபட்டு வந்த நிலையில், இப்போது, மனித வெடிகுண்டு தாக்குதலில், சிறார்களும் ஈடுபடுத்தப்படும் கொடூரங்களும் நடைபெறுகின்றன. நங்கர்ஹார் மாகாணத்தில், கிராமம் ஒன்றில், நேற்று காலை திருமணம் ஒன்று நடந்தது. அதில் பங்கேற்க, 13வயது சிறுவன் ஒருவனும் வந்தான்.அரசுக்கு ஆதரவான தீவிரவாத குழு ஒன்றின் தலைவரான, மாலிக் துார் என்பவரை நெருங்கிய அந்த சிறுவன், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில், உடல் சிதறி, மாலிக் துார் பலியானார். அருகில் இருந்த, நான்கு பேரும் இறந்தனர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்ரிக்க நாடுகள் சிலவற்றில், அல் - குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல்களுக்கு, பெண் குழந்தைகளும் பயன்படுத்தப்படும் கொடூரம் நிகழ்கிறது. தற்கொலைப்படைத் தாக்குதல்களில், மனித வெடிகுண்டுகளாக பெண் குழந்தைகள் ஈடு படுத்தப்படும் பயங்கரமும் அங்கு காணப்படுகிறது. அந்த வகையில் இப்போது, சிறுவர்களையும் மனித வெடிகுண்டுகளாக மாற்றி, ஆப்கனில், திருமண வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏழ்மை, வறுமை, கல்வியறிவு இன்மை, பழமைவாத சிந்தனை, ஆண் - பெண் வேற்றுமை போன்ற பல காரணங்கள், இந்த கொடுமைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Kumar - chennai,இந்தியா
13-ஜூலை-201910:08:49 IST Report Abuse
Ravi Kumar அமைதி மார்க்கத்தின் அட்டூழியங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X