பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மக்களை தேடி அரசு'
புதிய திட்டம் அறிவிப்பு

சென்னை: ''ஒவ்வொரு நபருக்கும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான, சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை, அவர்கள் விண்ணப்பிக்காமலேயே வழங்க, 'மக்களை தேடி அரசு' என்ற திட்டம், 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

'மக்களை தேடி அரசு': புதிய திட்டம் அறிவிப்பு


சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


அரசு துறையில், பல்வேறு சேவைகளை பெற, பொது மக்கள், துறை சார்ந்த அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கின்றனர். இது தவிர, அரசு இ - சேவை மையங்கள், இணையதளம் மற்றும் 'மொபைல் ஆப்' வழியாகவும் விண்ணப்பிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்கள் அனைத்தையும், அவர்கள் விண்ணப்பிக்காமலே, அவர்களுக்கு வழங்குவதற்காக, 'மக்களை தேடி அரசு' என்ற திட்டம், 90 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

இதற்காக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில், 'மக்கள் எண்' உருவாக்கப்படும். இதன் வழியே, ஒவ்வொருவருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான, சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள், குடிமக்கள் பெட்டகத்திலிருந்து, தானாகவே வழங்கப்படும். இதை, ஒவ்வொருவரும், தங்களது

Advertisement

மொபைல் போன் எண்ணை, பயனீட்டாளர் குறியீடாகவும், ஒருமுறை கடவுச்சொல் என்ற, 'பாஸ்வேர்டு' ஆகவும் பயன்படுத்தி, பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், அரசின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திட, தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில், 40.80 கோடி ரூபாய் செலவில், 'தமிழ்நாடு நம்பிக்கை இணையம்' அமைக்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
15-ஜூலை-201915:17:02 IST Report Abuse

Tamilஎன்னது இறப்பதற்கு முன்பே சாண்றிதழ் கொடுத்து விடுவார்களா?

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜூலை-201921:35:12 IST Report Abuse

தமிழ் மைந்தன்ஊழல்தலைவரின் வாரிசும் தற்போதைய திமுக கம்பெனியின் இயக்குனரும், தமிழக அரசியல் கோமாளியுமான திரு ஸ்டாலின் அவர்கள் பண மற்றும் பதவி ஆசை காட்டியும் படியாத அந்த கொங்கு நாட்டு காங்கேயம் காளை தணியரசு எப்போ அமைச்சரானார் புகழ்.......

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-201919:11:36 IST Report Abuse

Sriram VIt is good initiative. Government must ensure that corrupt government officials (DMK sympathisers) does not spoil the scheme.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X