பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் திருக்குளம் தூர் வார அனுமதி கிடையாதா?

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மாமல்லபுரம் திருக்குளம் தூர் வார அனுமதி கிடையாதா?

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் திருக்குளத்தை, துார் வாரி மேம்படுத்த, டி.வி.எஸ்., நிறுவனம் முயன்றும், கோவில் நிர்வாகம் அனுமதிக்காமல் அலைக்கழிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலின், புனித தீர்த்தமாக, புண்டரீக புஷ்கரணி எனப்படும் திருக்குளம் உள்ளது.இது, 2 ஏக்கர் பரப்புடையது. நீண்ட காலத்திற்கு முன், மணற்பரப்புடன் அமைந்து, எப்போதும் நீர் சுரக்கும். குளத்தை துார் வாராததால், ஊற்று சுரக்காமல், குளம் வறண்டு கிடக்கிறது.
இதை துார் வாரி பராமரிக்க, பக்தர்கள் வலியுறுத்திய நிலையில், 'டி.வி.எஸ்., டர்போ' நிறுவனம், இதற்குமுன்வந்தது.நிறுவன பொறியாளர், ராமகிருஷ்ணன், மே மாதம், குளத்தை பார்வை யிட்டு, கோவில் நிர்வாகம் அனுமதித்தால்,துார் வாரி குளத்தை மேம்படுத்துவதாக உறுதி அளித்தார்.

தாமதம் ஏன்?
ஆனால், நிர்வாக அனுமதி சிக்கல்களால், தற்போது வரைஅனுமதி கிடைக்காமல் அலைக் கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதேபோல், கோவளம், கைலாசநாதர் கோவில் குளத்தை துார் வார, தனியார் அறக்கட்டளை கோரியும், அனுமதி வழங்குவதில் தாமதமாகிறது.
இது குறித்து, ஸ்தலசயன பெருமாள் கோவில் செயல் அலுவலர், சங்கர் கூறியதாவது:குளம் துார் வாரும் பணியாக இருந்தாலும், உயர் நீதிமன்ற குழு அனுமதி பெற வேண்டிஉள்ளது. நன்கொடையாளர்,அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், உறுதிஅளிக்க வேண்டும் என, புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தான், அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-201918:52:34 IST Report Abuse
Sriram V Corrupt & inefficient government officials pampered by DMK, most of the government officials are DMK sympathisers. So they are delaying everything purposely. These government officials are putting public at inconvenience to bring bad repute to ruling government. All over TN, there is tax terrorism, everywhere government officials are raiding the private finance, trading companies with out proper document evidence. All these they are doing to loot the money. Whether government will take immediate action against such officials. If they keep doing like this, all the companies will leave TN. strongly I suspect DMK hand in this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X