பொது செய்தி

தமிழ்நாடு

மின்சாரம், குடிநீர் வசதி

Added : ஜூலை 13, 2019
Advertisement

சிவகாசி : சிவகாசி டி.கான்சாபுரத்தில் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் சமுதாய கூடம் அடிப்படை வசதிகள் இன்றி முறையாக செயல்படாததால் கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் இங்குசமுதாய கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்பட்டது. மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கட்டடம் இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. இருந்தாலும் சிலர் இங்கு நிகழ்ச்சி நடத்துகின்றனர். கட்டடத்திற்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படாததால் ஆபத்தான முறையில் மின்கம்பங்களில் செல்லும் மின்ஒயர்களில் 'கொக்கி' மூலமாக இணைப்பு கொடுத்து மின்சாரம் எடுக்கின்றனர்.

சமுதாய கூடத்திற்கு மின்சாரம் , குடிநீர் வசதி ஏற்படுத்தி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.சாமிநாதன் ,'' மக்களின் பயன்பாட்டிற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூடம் கட்டப்பட்டது. மின்சாரம் , குடிநீர் வசதி செய்துகொடுக்கப்பட வில்லை. இதனால் மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது. இது ஆபத்து என்பதால் சிலர் தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். சமுதாய கூடத்திற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X