பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் நடத்தும் குரூப் 4 தேர்வு ஆலோசனை முகாம்

Added : ஜூலை 13, 2019
Share
Advertisement
சிவகாசி : தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் சிவகாசி ரயில்வே பீடர் ரோடு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10:30முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் வி.ஏ.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6491 காலிப்பணியிடங்களை

சிவகாசி : தினமலர் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் சிவகாசி ரயில்வே பீடர் ரோடு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 10:30முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.

தமிழகத்தில் வி.ஏ.ஓ.,க்கள், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு செப்.,1ல் நடக்கிறது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூலை 14.வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 16.இத்தேர்வில் பங்கேற்பவர் நலன் கருதி தேர்வுக்கு எவ்வாறு தயாராக வேண்டும், பாடம் வாரியாக கேட்கப்படும் மாதிரி வினாக்கள், புதிய பாடத்திட்ட பகுதியில் இருந்து இடம் பெறும் பகுதிகள் குறித்து பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் 'பொது அறிவு' குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் பேசுகிறார். தமிழ் பாடம் குறித்து தமிழாசிரியர் கணேசன் பேசுகிறார். அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X