வறுமையிலிருந்து 27 கோடி பேர் மீட்பு; இந்தியாவுக்கு ஐ.நா., பாராட்டு

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement

நியூயார்க்: 'இந்தியாவில், 2006 - 2016க்கு உட்பட்ட காலத்தில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்' என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


சர்வதேச அளவில் நிலவும் வறுமை குறித்து, ஐ.நா., சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2006 - 2016 ஆண்டுகளில், சர்வதேச அளவில் நிலவிய வறுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 101 நாடுகளில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மக்களின் வருமானம் மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, அவர்களது வாழ்க்கை தரம், சுற்றுச்சூழல், கல்வி போன்ற விஷயங்களும், வரையறையாக சேர்க்கப்பட்டன.

இதன்படி, இந்த, 10 ஆண்டுகளில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, பெரு உள்ளிட்ட, 10 நாடுகளில், அந்தந்த அரசுகளின் முயற்சியால், பெருமளவில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில், இந்தியாவில், 27 கோடி பேர், வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழிருந்தோருக்கு, சுகாதாரம், ஊட்டச்சத்தான உணவு, சமையல், 'காஸ்' கல்வி போன்ற வசதிகளை, அரசு செய்து கொடுத்ததும், அது தொடர்பான திட்டங்களை விரைவாக நிறைவேற்றியதும் தான், இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவின், ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2006ல், வறுமையில் வசிப்போர், 74 சதவீதமாக இருந்தனர். கடந்த, 2016ல், இந்த எண்ணிக்கை, 46 சதவீதமாக குறைந்துள்ளது. இதுபோல், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வறுமை ஒழிப்புக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜூலை-201908:28:27 IST Report Abuse
தமிழ் மைந்தன் கடந்த பத்து ஆண்டுகளில்............... மன்மோகன் சிங் ஆட்சிக்கும் இதில் பங்கு உண்டு......... .ஆனால் ஊழல்போல முழுவதும் காங்கிரஸ் ஆட்சிக்கு இல்லையே......
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஜூலை-201907:56:32 IST Report Abuse
ஆரூர் ரங் இதுக்கான தியாகம்? .நமது இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு விட்டுக்கொடுத்து அந்தப்பணத்தில் இலவச சோறு போட்டு வெளியே கொண்டுவந்திருக்கோம் ஆபத்தான தொழில்கள் ஆலைகள் அமைத்து ஏற்றுமதி செய்து அந்த அந்நியச்செலாவணியில் பணக்காரர்களுக்கு பெட்ரோல் ஏழைகளுக்கு (??) தங்கம் இறக்குமதி செய்து வறுமையைப்போக்கியிருக்கோம் . இது சாதனைதான்? அடுத்த தலைமுறைக்கு வாழத்தக்க ஒரு நாட்டை விட்டுக் கொடுத்துவிட்டுப்போகும் உத்தேசம் பலருக்கும் இல்லை இல்லவேயில்லை
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஜூலை-201907:52:01 IST Report Abuse
Nalam Virumbi இதெல்லாம், தந்தி, தினகரன், மற்றும் சன் டி வி , புதிய தலைமுறை முதலியவற்றில் வந்தால் மட்டும் நம்புவோம். அப்படி நம்பினாலும் மோடி ஒயிக. மீண்டும் மோடி ஒயிக.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X