கிரண் பேடி -நாராயணசாமி விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (27)
Advertisement
கிரண் பேடி -  நாராயணசாமி  விவகாரத்தில் தலையிட மறுப்பு

புதுடில்லி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக, துணை நிலை கவர்னர், கிரண் பேடி, தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரிக்க மறுத்துவிட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கவர்னராக, கிரண் பேடி, ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டதில் இருந்து, காங்கிரஸ் முதல்வர், நாராயணசாமிக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது.
துணைநிலை கவர்னரான தனக்கு தான், முதல்வரை விட அதிக அதிகாரம் உள்ளது என, கிரண் பேடி கூறுகிறார்; அதை, முதல்வர் நாராயணசாமி மறுக்கிறார்.
இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, சில மாதங்களுக்கு முன் சென்றது. தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 'புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல்வர், நாராயணசாமியின் செயல்பாடுகளில், கவர்னர் தலையிடக் கூடாது; அவருக்கு அதிகாரம் இல்லை' என, உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மே 10 ல், உச்ச நீதிமன்றத்தில், கிரண் பேடி வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், அந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடும் எண்ணம், இந்த நீதிமன்றத்திற்கு இல்லை' என தெரிவித்து, கிரண் பேடியின் மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தீர்ப்பு குறித்து, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி கூறியதாவது:உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என, உத்தரவிட்டதுடன், கிரண் பேடியின், மேல்முறையீட்டு மனுவையும் ரத்து செய்தனர். இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமலில் உள்ளது; மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத் தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. கவர்னருக்கு, அரசின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை.இந்த தீர்ப்பு, புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த சரித்திர பூர்வ வெற்றி. மக்களால் தேர்வு செய்யப்படும் அமைச்சரவைக்கே முழு அதிகாரம் உள்ளது. ஜனநாயகம் வென்றுள்ளது. புதுச்சேரி மக்கள் வென்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201905:15:14 IST Report Abuse
Maha கிரண் பேடி அம்மையாருக்கு, மிக சிறந்த புலனாய்வு, தலைமைப்பண்பு, சீர்திருத்தம் என்று, மிக சிறந்த திறமைகள் உள்ளன. கவர்னர் போன்ற டம்மி பதவிகளில், இந்த திறமைகள் வீணாகின்றன. அதனால்தான் அவர் அடிக்கடி அரசு விஷயத்தில், தலை இடுகிறார் என்று நினைக்கிறேன். நமது நாட்டில், ஒரு பிரச்சினை உள்ளது. தேச பற்று,என்று அடிக்கடி பேசும் அரசியல் தலைவர்கள், எந்த கட்சியாக இருந்தாலும், ADMK, DMK, Congress, BJP.....நாட்டை ஆண்டவர்கள், உடல் நிலை சரியில்லை என்றல், அப்போல்லோ, அல்லது ப்ரீச் கண்டி, என்று மிக சிறந்த தனியார் மருத்துவமனை, அல்லது First Class அல்லது பிசினஸ் கிளாஸ் பிலைட் டிக்கெட் போட்டு, ஐரோப்பா அல்லது அமெரிக்கா பாரின் நாடு சென்று, treatment எடுத்துக்கொள்கிறார்கள்….ஐயா, நம் நாட்டு மருத்துவமனை என்னைய்யா ஆச்சு, தேச பற்று-அரசு மருத்துவமனை, அதை சூப்பரா பண்ணினோம், இதை சூப்பரா பண்ணினோம் என்று பேசுனீங்கள்ல..என்னய்யா ஆச்சுன்ன….யாரும் பதிலே சொல்லறதில்லை. ஏன், நமது நாட்டு, மருத்துவமனைகளை சீராக்க முடியாத? மாண்புமிகு, நமது நாட்டின், நிதி அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் அம்மையார், பட்ஜெட் பேச்சில், நமது நாடு, 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், 2019-2020, ஆகப்போகிறது என்று கூறி உள்ளார்கள்(70 லட்சம் கோடிகள்) மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இப்பேற்பட்ட பொருளாதாரம் மிக்க நாட்டில், நமது அரசு மருத்துவமனைகளை, மிக உயர்ந்த உலக தர்த்திக்கு உயர்த்த முடியாதா என்ன ? ultra-modern-world-class equipments, world class trainings, latest medicines including best chemotheraphy medicines, Standards, Process, Methodology, Tools, Health management etc. மாநிலத்திற்கு 2-3 மருத்துவமணிகள், அமைத்து, இவ்வாறு உயர்த்தி, கிரண் பேடி அம்மையார் போன்றவர்களை, இந்த சுகாதார மருத்துமனைகளின், நாட்டின் சீர்திருத்த தலைவராக போடுங்கள்….இவரிடம், மிக சிறந்த திறமைகள் உள்ளன, சரியான துறையில், இந்த அரசுகள் அமர்த்தினால், மிக சிறந்த நிர்வாகம் வெளிப்படும்,
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-201918:09:49 IST Report Abuse
Sriram V Hope Judiciary is aware that Chennai court is full of DMK & congies sympathisers. If you see all recent judgements from Chennai / Madurai division, it is favourable to Urban naxals/ DMK & Congies.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
13-ஜூலை-201916:32:55 IST Report Abuse
natarajan s நமது constitution lt. கவர்னருக்கு யூனியன் பிரதேசங்களில் administrator என்றுதான் கூறியுள்ளது. அட்மினிஸ்ட்ராட்டோருக்குத்தான் அதிக power. Delhi NCR (National Capital Region) என்பதால் அட்மினிஸ்ட்ராட்டோரின் அதிகாரம் கூடுதலாக வரையறுக்க பட்டுள்ளது. புதுச்சேரி 1963 க்கு பிறகுதான் french colony யில் இருந்து விடுபட்டதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலம் அதெற்கு தலைவர் துணை நிலை ஆளுநர்தான். Elected government அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும், உயர் நீதிமன்றம் எதோ காரணங்களால் இம்மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளது . இவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்விரைவில் புதுச்சேரியை தேட வேண்டிவரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X