சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

அரியலூர்: அரியலூரில், 2 வயது மகனை கொன்று, தாய் தற்கொலை செய்தது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
அரியலூர், புது மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர், ஜெய்குமார், 46. இவர், 'டாடா ஏஸ்' ஆட்டோவை வைத்து, தொழில் செய்து வருகிறார்.இவரது முதல் மனைவி, ராஜலட்சுமி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு, விக்னேஷ் என்ற மகன் உள்ளார். ஜெய்குமார், மூன்று ஆண்டுகளுக்கு முன், நாகப்பட்டினம், குத்தாலம் அருகே உள்ள, மேலசாலை கிராமத்தைச் சேர்ந்த, கணவனை இழந்த பெண்ணான, சுமிதா, 37, என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ரித்திஷ், 2, என்ற மகன் இருந்தார்.ஜெய்குமார், தினமும் மது அருந்தி வந்து, தகராறில் ஈடுபட்டதால், அவரை பிரிந்து, சுமிதா, தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், ஜெய்குமார், அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்து, சமாதானம் செய்து, சுமிதாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் மீண்டும், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த சுமிதா, நேற்று, வீட்டில், தன் மகன் ரித்திஷை, சேலையால் தூக்கிட்டு கொலை செய்து, தானும், மின்விசிறி கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, சுமிதாவின் தாய், அமுதா கொடுத்த புகாரின்படி, கயலாபாத் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
19-ஜூலை-201915:41:37 IST Report Abuse
Nallavan Nallavan டாஸ்மாக் கொண்டுவந்த அரசியல்வாதிகளுக்கு நன்றி ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X