பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை காண 2 லட்சம் பேர் குவிந்தனர்

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை : அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் விழா என்பதால் அலை, அலையாக பக்தர்கள் காஞ்சியில் குவிகின்றனர்.latest tamil news


40 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான சனியன்று பெருமாள் பச்சை பட்டு உடுத்தி, மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சனிக்கிழமை ஏகாதேசி பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், வார இறுதிநாள் என்பதாலும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் 48 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர், மீண்டும் தண்ணீருக்குள் பத்திரமாக வைப்பது வரதராஜ பெருமாள் கோவிலில் வழக்கம்.


வாழ்நாளில் 3 முறைதான் :


இந்நிலையில் கடந்த 1979 ஆம் ஆண்டுக்கு பின்னர், இப்போடு 40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் நிலையை தெப்பகுளத்தில் இருந்து எடுத்து பூஜை செய்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதாலும், ஒருவரின் வாழ்நாளில் அதிகப்பட்சமாக மூன்று முறை மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும், சிலையை கண்டு வழிபட தினந்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் காஞ்சிக்கு படையெடுக்கிறார்கள்.


latest tamil news

13 ஆம் நாள் உற்சவம் :


அத்திவரதர் உற்சவத்தின் 13ஆம் நாளான இன்று பச்சை பட்டு உடுத்தி மலர் மாலை அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சனிக்கிழமை ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் உகந்த நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது.


latest tamil news

2 லட்சம் பேர் ; 5 மணி நேரம்


கிட்டத்திட்ட இரண்டு லட்சம் பக்தர்கள், காஞ்சிபுரத்தில் குவிந்தனர். கோவிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த பின்னரே சாமியை தரிசிக்க முடிந்தது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesaperumal - sivakasi,இந்தியா
16-ஜூலை-201910:41:57 IST Report Abuse
venkatesaperumal நெடுதூரம் நின்றபடி காத்திருப்பு பக்தர்களை களைப்பும், மலைப்பும் ஏற்படுத்தும் இதற்கு மாற்றாக 500 நபருக்கு தரிசனம் வரை பின்னாடி வருபவர்களை ஆங்காங்காய் அமர்த்தி இளைப்பாற்றலாம் புண்ணியமா போகும்
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201908:22:57 IST Report Abuse
Nagarajan Duraisamy அப்படியே பொன்மணிக்கவேல் சிலை மீட்பு மற்றும் பாதுகாப்பு நிதி ஒன்றை ஆரம்பித்து மக்களிடம் நிதி திரட்டி பொன்மணிக்கவேலுக்கு நன்கொடையாக கொடுத்து உதவ வேண்டும். அத்திவரதர் சிலையையே கடத்த துணிந்தாலும் துணிவார்கள் இப்படியே விட்டால்.
Rate this:
Cancel
Sriram - chennai,இந்தியா
13-ஜூலை-201922:42:38 IST Report Abuse
Sriram தினமலர்: நீங்க அத்திவாரதர் செய்தியை நல்ல பிரபலப்படுத்திருக்கீங்க... நல்லது... இன்று நான் தரிசனத்திற்கு சென்றேன், தனி ஒருவனாக சென்றேன், ஆனால் அத்திவரதரை காண இயலவில்லை, இது என் சொந்த காரணம் தான், தவிர வேற எந்த விஷயமும் இல்லை... ஆனால், அங்கே வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சில அவலங்களையும் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும்.... சரியான கட்டமைப்பு இல்லாமல் இருக்கிறது... நீங்க காட்டுற படத்துல போனோமா வந்தோமான்னு காட்டிட்டு போயிடுறீங்க... மக்களும் அதை நம்பி அங்க வந்து குவியுறாங்க.. ஆண்கள், எப்படி வேணும்னாலும் சமாளித்து விடுவார்கள், உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல், வெயிலிலோ, மழையிலோ, பொறுமையாகவும், உடன் வரும் நண்பர்களுடன் அரட்டை அடித்தும் எப்படியாவது சென்று தரிசித்திடுவார்கள் ஆனால், பலர் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்... இவர்களுக்கு சரியான குடி நீர் வசதியோ, உணவு வசதியோ இல்லை.. இதனை சாக்காக வைத்து அக்கம் பக்கம் உள்ள கடைகள் நல்ல பணம் பாக்கிறார்கள்... இது ஒரு புறம் இருக்க, சரியாக மக்களை வரிசை படுத்தி தரிசனம் செய்வதற்கு, கோவில் தேவஸ்தானமும், அறநிலை துறையும், காவல் துறையும் நல்ல ஏற்பாடு செய்ய வில்லை.. அங்கே, இன்று நான் காலை 7:30 வரிசையில் நின்றேன்... பின்னால் வந்தவர்கள் முன்னேற முன்னேற வரிசை 4 , 5 ஆக உயர்ந்தது...பார்த்தல் ஒரு பெரும் கும்பல் போல் காட்சி அளித்தது... பிறகு ஒரு 100 மீ செல்வதற்குள் 2 மணி நேரம் கடந்தது... பிறகு 3 மணி நேரம் கடந்த போது, வெறும் அறை கி.மீ மட்டுமே கடந்திருப்போம் ஒரு சந்து திரும்பி, மற்றோரு சந்துக்குள் செல்லும் முன் வேறு வழியில் இருக்கும் தெருவில் இருந்த இதே போன்ற கும்பல், அசைவற்றிருக்கும் கும்பலுடன் இணைகிறது...அங்கு சில ரகளைகளும் இதனால் ஏற்படுகிறது, சில இடங்களில் சிலர் மயங்கியும் விழுகின்றனர், அவர்களை பத்திரமாக கூட்டி செல்லவும் இயலவில்லை..., இதையெல்லாம் நீங்கள் பதிவிட்டிருந்தால், கை குழந்தைகள், முதியவர்கள் சற்று கவனத்துடன், உரிய நாட்களில் வந்து பொறுமையாக தரிசிக்கலாம்... இதையே, மற்ற மாநில கோவில்களை போல், ஒரு சரியான திட்டமிடலுடன் வழிமுறை ஏற்படுத்தினால் ஒரே வரிசை முறையில் கோவிலுக்குள் சென்றிருக்கலாம்... சற்று நேரம் ஆகும் ஆனாலும் கவலை இல்லை... இதையெல்லாம் மேற்கோள் காட்டி அரசாங்கத்திற்கு கொண்டு செல்லுங்கள்.... இனி வரும் நாட்களிலாவது பக்தர்கள் நிம்மதியாக அத்திவரதரை தரிசிப்பார்கள்... ஆகையினால், என் அனுபவத்தில் பக்தர்களுக்கு சொல்லகிறேன்... உடல் நலம் சரியில்லாதவர்கள், கை குழந்தைகள், பெண்கள் முடிந்தவரை online booking செய்து பார்க்கவும்... இளைஞர்கள், ஆண்கள் முடிந்தவரை தனியாகவோ, ஆண் நண்பர்களுடனோ online booking பண்ணாமல் தர்ம தரிசனம் முறையில் சென்று வாருங்கள்... வரிசையில் நிற்பவர்கள், மற்றவர்களை இடித்து முன்னேறாதீர்கள், முடிந்தவரை, வீண் கதைகளையோ, மற்றவர்களை திட்டியோ பேசாமல், "ராம, ராம", என்றோ, "வரதா, வரதா" என்றோ, இறை நாமத்தை சொல்லுங்கள், முடிந்தவரை பக்கத்தில் நிற்பவர்களுக்கு உதவுங்கள், இல்லாவிட்டாலும் பரவா இல்லை, அனால் அவர்களுக்கு தொந்திரவு இல்லாமல் இருங்கள் யாருக்கு தெரியும் அருகில் இருப்பவர் அந்த அத்திவாரதராகவும் இருக்கலாம் அல்லவா... எல்லாவற்றிக்கும் மேல், பெருமாள் நம்மை காண விரும்பினால் மட்டுமே, அவரை தரிசிக்க முடியும். ஓம் நமோ நாராயணாய....
Rate this:
naga - ny,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201907:08:37 IST Report Abuse
nagaஅருமையான பதிவு. இதைத்தான் தினமலர் செய்தியாக வெளியிட்டுருக்க்க வேண்டும்....
Rate this:
14-ஜூலை-201911:55:20 IST Report Abuse
C p SubramanianI fully support the views. Newspapers and medias an impression that all are well arranged. But reality is totally opposite. There are hardly any arrangements for the general public. There are some toilets but they are seldom maintained. Water from water tank is directly supplied and the quality and hygiene is questionable. It is a pity that the government could not build roofs to shield the public from sun. The authorities could have acted with bit more imagination and commitment. They take care of only the VVIPs. Even God will not help....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X