துடைப்பம் தரையில் படாமல் சுத்தம் செய்வது எப்படி? ஹேமாமாலினி பாடம்

Updated : ஜூலை 13, 2019 | Added : ஜூலை 13, 2019 | கருத்துகள் (43)
Advertisement
தூய்மை இந்தியா, ஹேமாமாலினி, பார்லிமென்ட் வளாகம், துடைப்பம், சுத்தம், பா.ஜ.,, எம்.பி.,

புதுடில்லி: பாலிவுட் முன்னாள் நடிகையும், பா.ஜ., - எம்.பி.,யுமான, ஹேமமாலினி, பார்லிமென்ட் வளாகத்தை சுத்தம் செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, 'நெட்டிசன்'கள், அவரை கடுமையாக விமர்சித்ததுடன், கிண்டலும் அடித்துள்ளனர்.






‛தூய்மை இந்தியா'

தமிழகத்தை பூர்விகமாக உடையவர், ஹேமமாலினி, 70; இவர், பாலிவுட்டின் பிரபலமான நடிகை. மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் வசிக்கும் இவர், உத்தர பிரதேச மாநிலம், மதுரா தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார்.'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரபலப்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பார்லிமென்ட் வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில், நேற்று, ஹேமமாலினி ஈடுபட்டார்.
அவருடன், மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரும் இணைந்தனர்.பார்லிமென்ட் வளாகத்துக்கு வெளியில் உள்ள சாலையை, சுத்தப்படுத்தும் பணியில், இவர்கள் ஈடுபட்டனர். அனைவரும், கைகளில் துடைப்பம் வைத்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும், சுத்தப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.






பெயரளவுக்கு சுத்தம்

ஹேமமாலினி மட்டும், கேமராவுக்கு முகம் காட்டியபடி, பெயரளவுக்கு சுத்தம் செய்தார். முழு, 'மேக்அப்'பில் இருந்த அவர், கழுத்தில், 'ஹேண்ட்பேக்' மாட்டியிருந்தார். கனவுக்கன்னி கண்களில் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். அவர் சுத்தம் செய்தபோது, துடைப்பம், தரையிலேயே படவில்லை.இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, 'நெட்டிசன்'கள் பலரும், கொந்தளித்து, ஹேமமாலினியை, கடுமையாக கிண்டலடித்தும், விமர்சித்தும், கருத்துகளை பதிவிட்டனர்.'உங்கள் நாடகமெல்லாம் போதும்' என, ஒருவர் தெரிவித்திருந்தார்.

மற்றொருவர், 'கனவுக்கன்னி, இப்போது, நாடக மகாராணியாகி விட்டார்' என, குறிப்பிட்டிருந்தார்.மேலும் ஒருவர், 'துடைப்பம் தரையில் படாமல், சுத்தம் செய்வது எப்படி என்பதை, ஹேமாவிடம் தான், கற்றுக் கொள்ள வேண்டும்' என, தெரிவித்திருந்தார். மேலும் ஒருவர், 'குப்பையே இல்லாத இடத்தில், குப்பையை சுத்தம் செய்யும் வித்தையெல்லாம், ஹேமாவுக்கு தான் தெரியும்' என, தெரிவித்திருந்தார்.இந்த விவகாரம், நேற்று, தேசிய அரசியலில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-201920:04:53 IST Report Abuse
J.Isaac மக்கள் துடைப்பானை தூக்கி பிடிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-ஜூலை-201919:27:44 IST Report Abuse
J.Isaac அடுத்து கங்கையை சுத்தம் செய்ய அனுப்பவேண்டியதுதான் .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூலை-201917:13:59 IST Report Abuse
Endrum Indian இதைத்தானே நான் எவ்வளவு வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கின்றேன். நடிக/நடிகையர்கள் தோல் காட்டி பணம் பண்ணும் தொழில் செய்பவர்கள். எழுத்தாளர் எழுதியதை டப்பிங் ஒருவர் சொல்ல இவர்கள் டைரக்டர் ரெடி டேக் 1 சொல்ல உடலில் அவர் சொன்ன பாகத்தை ஆட்டி/காட்டி அவ்வளவே செய்கின்றார்கள். டைரக்டர், ஒளிப்பதிவாளர், காமெராமன், திரை இசை டீம், டப்பிங் வாயிஸ்,டப்பிங் எல்லாம் வேறு வேறு அனால் சினிமாவில் என்னவோ ஹீரோ தான் அனைத்தையும் செய்வதாக ஒரு டுபாக்கூர் இமாஜினேஷன் - மாயா. அவர்களை மக்கள் ஒரு ரோல் மாடல் அளவுக்கு வைத்துக்கொள்ளக்கூடாது ஒருக்காலும். அங்கு நடப்பது என்ன சாதாரணன் சொல்வது??? நம்ம தலென்னா தலே தான் என்ன பேச்சு, என்ன பாட்டு, என்னா சண்டை என்னா ஸ்டைல் அப்படியே ஒரே கையால் அத்தனை பெ ரையும் தூக்கி அடிக்கிறார்????இதில் ஒன்று கூட இவர்கள் செய்வதல்ல?????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X