காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டம் எடுப்பது ஏன்?

Updated : ஆக 04, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

காங்., தலைவர் பதவியிலிருந்து, ராகுல் ராஜினாமா செய்து, ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டன. தற்காலிக தலைவராக, இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க, இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.கட்சியில் என்ன தான் நடக்கிறது என, குழப்பத்தில் உள்ளனர், இரண்டாம் கட்ட தலைவர்களும், தொண்டர்களும். இதற்கிடையே, கோவாவில், எதிர்க்கட்சி தலைவர் உட்பட, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், 10 பேர், ஒட்டு மொத்தமாக, பா.ஜ.,வில் இணைந்து விட்டனர்.

கர்நாடகாவிலும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகி, கூட்டணி அரசுக்கு, 'ஆப்பு' வைத்து உள்ளனர். 'காங்., இனி, காலி; தலைமை சரியில்லாத கட்சியில், எதற்கு நீடிக்க வேண்டும்' என்கின்றனராம், இந்த, எம்.எல்.ஏ.,க்கள்.'இனி, காங்.,கில் எங்களுக்கு மட்டுமின்றி, யாருக்குமே எதிர்காலம் இல்லை. எனவே, இங்கேயே தொடர்வதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை' என, கட்சி மாறிய, கோவா, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பகிரங்கமாகவே சொல்கின்றனராம்.
இந்த ஆண்டு இறுதிக்குள், மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில, சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இங்கு, தேர்தலை எதிர்கொள்வது எப்படி என, ஆலோசனை சொல்லவும், காங்.,கில் யாருமே இல்லை.கட்சிக்கு தற்காலிக தலைவர் நியமிப்பதில், சோனியாவிற்கு விருப்பம் இல்லையாம். எப்படியாவது மீண்டும் ராகுலே, கட்சி தலைவராக வேண்டும் என்பது, தாயின் ஆசை. 'அதுவரை, காங்., என்ற கட்சி இருக்க வேண்டுமே' என, கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., கட்சியினர்.




நிர்மலா-வை பாராட்டியகாங்., தலைவர்கள்


நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்த பின், இது தொடர்பான விவாதம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நடைபெற்றது. ராஜ்யசபாவில், முன்னாள் நிதியமைச்சர், சிதம்பரம் பேசுவதற்கான முறை வந்த போது, நிர்மலா இல்லை. உடனே, காங்., - எம்.பி.,க்கள், 'சிதம்பரத்தின் பேச்சை நிதி அமைச்சர் கேட்க வேண்டும்; எங்கே போய்விட்டார் அவர்' என, கேள்வி எழுப்பினர்.

ஓய்வறையில் இருந்த நிர்மலாவுக்கு தகவல் பறந்தது; 'அவர் பேசட்டுமே; யார் அவரைத் தடுப்பது' என, கூறியபடி,சபைக்கு சென்றார்.நிர்மலா,சபைக்கு வந்த பிறகு, பேச்சை ஆரம்பித்தார் சிதம்பரம். பட்ஜெட்டில் அது சரியில்லை; இது சரியில்லை என, கடுமையாக விமர்சித்தார். நீண்ட உரைக்கு பின், பேச்சை முடித்த சிதம்பரம், நிர்மலாவின் இருக்கைக்கு அருகே சென்றார். 'நீங்கள் பதில் சொல்லும் போது, நான் சபையில் இருக்க மாட்டேன்.

சென்னையில், ஸ்டாலின் தலைமையில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டு உள்ளேன்... சாரி' என்றாராம், சிதம்பரம்.மறுநாள், பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார், நிர்மலா. 'முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவரை பாராட்டுகிறேன்' என, பேச்சை ஆரம்பித்தார் நிர்மலா.'சிதம்பரத்தை பாராட்டுகிறாரே' என, காங்., - எம்.பி.,க்கள் உற்சாகமடைந்தனர்.
பேச்சை தொடர்ந்த நிர்மலா, 'ஒரு நிதி அமைச்சர், என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாது என்பதை, சிதம்பரத்தை பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். 'அப்படித் தான், எனக்கு சிதம்பரம் உதவி செய்திருக்கிறார்' என, நிர்மலா கூறியதும், பா.ஜ., - எம்.பி.,க் கள் மேஜையை தட்டி ஆர்ப்பரிக்க, நிலவரம் புரிந்து, அமைதியாயினர், காங்., - எம்.பி.,க்கள்.பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்த கையோடு, சிதம்பரத்தையும் ஒரு வழியாக்கி விட்டார், நிர்மலா. 'நல்லவேளை, சபையில், சிதம்பரம் இல்லை' என, காங்., - எம்.பி.,க்கள் ஆறுதல்பட்டனர்.
விஷயம் அத்துடன் முடியவில்லை. சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்ததற்காக, நிர்மலாவின் இருக்கைக்கு சென்று பாராட்டினார், காங்., மூத்த தலைவர், மோதிலால் வோரா. முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், நிர்மலாவுக்கு பாராட்டு தெரிவிக்க, காங்., - எம்.பி.,க்கள் நொந்துபோய் விட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - Qin Huang Dao,சீனா
18-ஜூலை-201913:22:42 IST Report Abuse
sivakumar நாட்டில் இப்போது சர்க்கஸ் கம்பெனிகளே இல்லை. இருந்த ஒரே ஒரு காண் கிராஸ் சர்க்கஸ் கம்பெனியும் விரைவில் மூடு விழா காண போகிறது. பில்டிங்கும் வீக், பேஸ் மட்டமும் வீக்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X