சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இவனுங்க 'போராளி'களாம்!

Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (29)
Advertisement
 இவனுங்க 'போராளி'களாம்!

தமிழகத்தில் போராளியாவது எளிது.கறுப்பு ஆடை, தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவில் பிறந்து, புரட்சியாளராக மாறிய, சே குவேரா படம், அரசின் திட்டத்தை எதிர்த்து கோஷம்... அவ்வளவு தான்; எளிதில், 'போராளி பட்டம்' கிடைத்து விடும்!

முதலில், யார் அவர், பின்புலம் என்ன, ஏன் அரசின் திட்டத்தை எதிர்க்கிறார் என்பது குறித்து, ஆழ விசாரிக்காமல், 'ஆஹா... தமிழகத்திற்கு இன்னொரு போராளி கிடைத்து விட்டார்' என, சில ஊடகங்கள், அவருக்கு உடனே, 'போராளி' பட்டமளித்து, நச்சு விதையை, தமிழக இளைஞர்கள் மத்தியில், துாவி விடுகின்றன.

*அர்ஜென்டினா நாட்டில் செல்வ செழிப்பில் பிறந்து, ஆடம்பரத்தையும், வசதிகளையும் துறந்து, அடிமைப்பட்டுக் கிடந்த, வட அமெரிக்காவில் உள்ள, கியுபா நாட்டிற்காக, ஆயுதம் ஏந்தி போராடி, விடுதலை பெற்றுத் தந்தவர், சே குவேரா.

* இந்தியா மற்றும் ஹிந்து மதத்தின் பெருமையை, உலக அரங்கில் துாக்கி நிறுத்தியவர், சுவாமி விவேகானந்தர்.

* கைவசம், வழக்கறிஞர் தொழில் இருந்தும், அடிமைப்பட்டு இருந்த தன் நாட்டை மீட்க, அகிம்சை வழியில் உறுதியாய் நின்று, இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மகாத்மா காந்தி.
* பூமி தான இயக்கத்தைத் துவங்கி, பெரும் பண்ணையாளர்களிடம் அன்பு செலுத்தி, ஏழைகளுக்கு நிலங்களை பெற்று கொடுத்தவர், வினோபா பாவே.

* மேற்கு ஆசியாவில், மெசபட்டோமியா என்றழைக்கப்பட்ட, தற்போதைய ஈரான் - ஈராக் பகுதியில் பிறந்த, ஆக்னஸ் கொன்சகா பொஜாக்சியு என்ற பெண், இந்தியாவின், மேற்க வங்க மாநிலம், கோல்கட்டா நகருக்கு வந்து, தொழுநோயாளிகளுக்காக, தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். பின்னாளில், அன்னை தெரசாவானார்.

* நம் தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் பிறந்து, விண்வெளியில் இந்தியாவின் கொடியை பறக்க விட்டு, ஜனாதிபதியாக உயர்ந்தவர், அப்துல் கலாம்.மேற்கண்ட வரிசையில் உள்ள தலைவர்களில், சே குவேராவை மட்டுமே, சில வியாபார அரசியல்வாதிகள், இன்றைய இளைஞர்களிடம் முன்னிறுத்துகின்றனர்.

ஏனெனில் அவர் மட்டுமே, ஆயுதம் தாங்கி போராடியவர். மற்றவர்கள், அகிம்சை வழியில், மக்களுக்கு தொண்டு புரிந்தோர்.'இரண்டும் கெட்டான்' வயதில் உள்ள இளைஞர்களுக்கு, வன்முறையும், உணர்ச்சிகர சிந்தனையுமே மேலோங்கி இருக்கும். அதனால் அவர்களை, எளிதில் துாண்டி விடலாம்.
போராட்டங்களில் தீக்குளித்து இறப்போர், பெரும்பாலும் இளைஞர்களே! போராட்டத்திற்கு தலைமை வகிக்கும், தலைவன் யாராவது, தற்கொலை செய்திருக்கிறாரா என்பதை, அப்பாவி, 'விட்டில்பூச்சிகள்' உணர்வதில்லை.இதோ... பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியுள்ள முகிலனை, சில ஊடகங்களும், சில அரசியல் வியாபாரிகளும், 'போராளி'யாக சித்தரித்தன. ஏன், ஒரு பிரபல பத்திரிகை ஒன்று, அவரை, 'சிறந்த போராளி' என, விருது கொடுத்து, தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அடையாளப்படுத்தியது.
விளைவு... இளைஞர்களுக்கு, ஒரு பாலியல் வழக்கில் சிக்கிய நபர் முன்னுதாரணமாகி போனார். வழக்கிற்கு பயந்து, தலைமறைவான முகிலனை, 'ஸ்டெர்லைட்' விவகாரத்தால் தான், அரசு மறைத்து வைத்திருக்கிறது என, பொய்யான தகவல், இணையத்தில் பரப்பி விடப் பட்டது.அவருக்காகத் தான், 'எங்கே முகிலன்?' என, இணையம் வழியே, இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தினர்.முகிலன் என்பவர், தன்னுடன் போராட்டக் களத்தில் இருந்த பெண்ணை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது குறித்த வழக்கிற்கு பயந்து, தலைமறைவாகி இருக்கிறார் என்கிறது, காவல் துறை.
முகிலனுக்காக, வரிந்துகட்டி களத்தில் இறங்கிய, பல, 'போர்வையாளர்கள்' பதுங்கி ஓடி விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன், பிரபல பெண் பாடலாசிரியர், 'தமிழின போர்வையாளர்' அமைப்புகளில் உள்ள, ஒரு தலைவனை, திருமணம் செய்துகொண்டார்.
சில ஆண்டுகளில், கணவருக்கு, இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறினார். அந்த பாடலாசிரியை, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில், 'என் கணவரின், தமிழின போராட்டத்திற்கான காரணங்களை வெளியிடுவேன்' என, அறிக்கை விடவும், தமிழின, 'போர்வையாளர்'கள், ஓடி வந்து, அவ்விஷயத்தை மூடி மறைத்தனர்.
சில மாதங்களுக்கு முன், ஆணவ படுகொலையால், கணவரை இழந்த பெண்ணை, சில அமைப்புகள், மூளைச்சலவை செய்து, போராட்டக்களத்தில் இறக்கினர். அப்பெண்ணுக்கு, மறுமணமும் செய்து வைத்தனர்... யாரை தெரியுமா? ஏற்கனவே, ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றியவனை. அவன் ஏன், இந்த கைம்பெண்ணை திருமணம் செய்தான் என்றால், 'ஓசி விளம்பரம் கிடைக்கும்' என்பது மட்டும் தான்.
பாதிக்கப்பட்ட பெண் முறையிட, 'தமிழின போர்வையாளர்' கும்பலில் ஒன்று, இரு தரப்பையும் சமாதானப்படுத்தியது.ஜல்லிக்கட்டு போராட்டத்தில், முதல்வரை ஆபாசமாக பேசிய பெண்ணை தான், 'பெண் போராளி' என, தலையில் துாக்கிவைத்து ஆடியது ஒரு கும்பல். கடைசியில், அப்பெண்ணின் லட்சணம், ஒரு, 'டிவி' நிகழ்ச்சியில் பல்லிளித்தது!
மேற்கண்டவை, ஒரு பானை சோற்று, சில பருக்கைகள் போன்ற உதாரணங்கள்.இது போல, எத்தனையோ மோசடியாளர்களை, இளைஞர்களிடம் நம்பிக்கை நாயகராய் முன்னிறுத்தி உள்ளனர். அதற்காக, எந்த ஊடகமும் வெட்கப்படவில்லை... தமிழக இளைஞர்களிடம் நஞ்சை துாவுகிறோமே என, வருத்தப்படவும் இல்லை!
காவிரி நதிநீர் நடுவர் ஆணையம் அமைக்க வேண்டும் என, சென்னையில் நடக்கவிருந்த கிரிக்கெட் விளையாட்டை, போராட்டக் கும்பல் தடுத்ததே... ஞாபகம் இருக்கிறதா?இன்று தமிழகம் முழுவதும், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. அரசின் உதவியை எதிர்பார்க்காமல், மக்கள் தன்னெழுச்சியால், நீர்நிலைகளை துார்வாரி வருகின்றனர். இனி, தமிழகத்தில் பொழியும் மழைநீரில், ஒரு சொட்டுக் கூட வீணாகக் கூடாது என, சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கிஉள்ளனர்.
அன்றைக்கு, கிரிக்கெட் போட்டியை நடத்த விடாமல், போராட்டம் நடத்தி, போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்த, 'போர்வையாளர்' கும்பல், நீர்நிலைகளை துார்வார, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை.தமிழர்களே... புரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள பிரச்னைகளை துாண்டிவிட்டு குளிர்காய வேண்டும் என்பதே, அவர்களின் நோக்கம்.அதற்கான தீர்வு என்ன, அதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில், அவர்கள் அக்கறை காட்டமாட்டார்கள்.
இளைஞர்களின் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். அவர்களை, சரியான பாதையில், வழி நடத்த, தொலைநோக்கு சிந்தனையுடைய தலைவனை, ஊடகங்கள் அடையாளம் காட்ட வேண்டும்.வன்முறை என்ற கத்தி, தேசத்தை கிழித்து விடும்; அகிம்சை என்ற நார், தேசத்தை பூமாலையாக்கும்.

இ - மெயில்:sureshmavin@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
20-ஜூலை-201916:09:55 IST Report Abuse
s.rajagopalan அரசியலின் தரத்தை சாக்கடையில் தள்ளியது தி மு க . நினைவு இருக்கிறதா ? மலர் கிரீடம் வைத்துக்கொண்டு இவர்கள் அடித்த கூத்து. இரண்டு எம் எல் ஏ கள் சபாநாயகர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அசிங்கப்படுத்தினார்களே ? இந்த கழகங்கள் அசுர பிடியிலிருந்து தமிழ் நாடு என்று விடுபடுமோ. 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏழரை சனி நம்மை பாடாய் படுத்துகிறது
Rate this:
Share this comment
Cancel
anbuganesh - CHENNAI,இந்தியா
20-ஜூலை-201912:38:16 IST Report Abuse
anbuganesh தினமலரை இன்றுதான் madhikiren
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
19-ஜூலை-201920:06:17 IST Report Abuse
மாயவரத்தான் என்ன சொல்வது சூரியனால் இருள் சூழ்ந்த தமிழகத்தை ஞான சூரியனாக விளக்கும்/விலக்கும் கட்டுரை.மிக அருமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X