சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்த மகள் மாயம்; எஸ்.பி.,யிடம் தந்தை புகார்

Added : ஜூலை 14, 2019
Share
Advertisement

ஈரோடு: மாயமான மகளை கண்டு பிடித்து தரக்கோரி, எஸ்.பி.,யிடம் தந்தை புகார் அளித்தார். ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகர், குப்பிபாலம் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான், 62, டெய்லர். இவருக்கு மூன்று மகள், 3 மகன் உள்ளனர். ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசனிடம், ஷாஜகான் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என் இரண்டாவது மகள் பர்வீன், 22; நான்கு ஆண்டுக்கு முன், துறையூர் டி. களத்தூரை சேர்ந்த லாரி டிரைவர் தாஜூதீனுக்கு, 38, திருமணம் செய்து வைத்தோம். இருவரும் எங்கள் வீட்டருகில் வசித்து வந்தனர். குழந்தை கிடையாது. தாஜூதின் வண்டிக்கு போய் விட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை வருவார். சில நாட்களுக்கு முன், மகளுக்கும், மருமகனுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பர்வீன், கடந்த, 7ம் தேதி விஷம் குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 9ம் தேதி பர்வீன் மாயமானார். மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. மருமகனிடம் விசாரணை நடத்தி, மகளை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கேட்டு கொண்டார். ஷாஜகானுடன் மனு அளிக்க, தாஜூதீனும் உடன் வந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X