சொந்த ஊர் பாசம் சோகத்தில் முடிந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சொந்த ஊர் பாசம் சோகத்தில் முடிந்தது'

Added : ஜூலை 14, 2019
Share

ஈரோடு: சித்தோடு, வாய்க்கால்மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி செல்வி, 33; ஐந்து ஆண்டுக்கு முன் இருவரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். செல்விக்கு ஏற்கனவே, சேலத்தை சேர்ந்த நபருடன் திருமணம் நடந்து, இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் முதல் கணவர், மகன்களை பிரிந்தார். அதன் பின், கிருஷ்ணனை திருமணம் செய்தார். கடந்த, 7ல் கிருஷ்ணன், செல்வியின் தம்பி ஆகியோர், பழநி கோவிலுக்கு சென்று திரும்பினர். தம்பியுடன் சொந்த ஊருக்கு செல்வதாக, செல்வி கூறியுள்ளார். நாளை செல்லலாம் என கிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த செல்வி, ஒடுவன்தழையை தண்ணீரில் வேக வைத்து நீரை குடித்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X