பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

தர்மபுரி: நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், தங்கள் ஆட்சி அமைய, பா.ஜ., செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காங்., - எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, தமிழக காங்., கட்சி முடிவு செய்தது. அதன்படி, தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, மாவட்ட காங்., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். கர்நாடகா, கோவா மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க, பா.ஜ., முயற்சி செய்து வருவதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் எம்.பி., தீர்த்தராமன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X