மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் மந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள் மந்தம்

Added : ஜூலை 14, 2019

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எர்ரணஹள்ளி சமத்துவபுரத்தில், பாதியில் நிறுத்தப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியால், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாலக்கோடு அடுத்த, எர்ரணஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சமத்துவபுரத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த, இரண்டு ஆண்டுகளாக இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு இவர்கள் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், கடந்த, ஓராண்டுக்கு முன், இப்பகுதிக்கு குடிநீர் வழங்க, ஒரு ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணி ஆமை வேகத்தில் நடந்து வந்ததால், ஆழ்துளை கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. இதனால், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக, அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு, 1 கி.மீ., தூரம் நடந்து சென்று, தண்ணீர் கொண்டு வருகின்றனர். மேலும் சிலர், ஒரு டிராக்டர் தண்ணீர், 700 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அருகில் உள்ள ரெட்டியூரிலிருந்து, ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைத்து, சமத்துவபுரத்துக்கு குடிநீர் வழங்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X