பாலியல் வன்கொடுமை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : ஜூலை 14, 2019

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நேரிடும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க, மருத்துவர்கள் மற்றும் போலீசார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இதில், தமிழக மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ பேசியதாவது: நோயாளிகளுக்கு, சிறிய காயங்களாக இருந்தாலும், அதனால் மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மருத்துவர்கள் உணர வேண்டும். மருத்துவர்கள் பாலியல் தொந்தரவுகளை, நோயாக பார்க்காமல், குற்றமாக பார்க்க வேண்டும். நோயாக கருதி, போலீசார் மருத்துவர்களின் அறிக்கையை எதிர்பார்க்கக் கூடாது. பாலியல் கொடுமைகள் இந்திய தண்டனை சட்டத்தில், குற்றம் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, பாலியல் பாதிப்புகள் ஒரு குற்ற நிகழ்வாகும். போக்சோ சட்டத்தில், மருத்துவர்கள் தங்கள் வரன்முறைகளை பார்க்க வேண்டும். இதுகுறித்து, எவ்வாறு சான்று அளிக்க வேண்டும் என, அறிய வேண்டும். இதுபோன்ற நிலைகளில், மனநிலை மருத்துவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதுகாக்கவே, போக்?சோ சட்டம் உருவாக்கப்பட்டது. குழந்தைகளுக்கு சிறுவயதில் பாதித்த தன்மைகள், அவர்கள் எந்த உயர் பதவிக்கு உயர்ந்தாலும், அவர்களால் அந்த பாதிப்பு வெளிப்படுத்தப்படும் என் பதையும், மருத்துவர்கள் அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தர்மபுரி எஸ்.பி., ராஜன், அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சீனிவாசராஜ் உட்பட பலர், கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X