பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்பு

Added : ஜூலை 14, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும், 1,600 ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட புத்தாக்க பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், புதிய பாடத்தில், பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வகுப்புகள் வரும், 18ல் துவங்கி, ஆக., 2 வரை நடக்கிறது. இதில், புதிய பாடத்தின் படி, எளிய முறையில் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் பாடம் நடத்தும் விபரங்கள் கற்றுத்தரப்பட உள்ளது. அதன்படி, பாடவாரியாக இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள், தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி, அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடக்கிறது. சென்னையில் பயிற்சி பெற்ற, 18 கருத்தாளர்கள் கொண்ட குழுவினர், இப்பயிற்சியை, 1,600 ஆசிரியர்களுக்கு வழங்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, தர்மபுரி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X