பொது செய்தி

தமிழ்நாடு

கொடுத்த லேப்டாப்பை திரும்ப பெற்றதால் மாணவர்கள் ஏமாற்றம்

Added : ஜூலை 14, 2019
Advertisement

கடத்தூர்: கடத்தூர் அருகே, லேப்டாப் வழங்கிய சிறிது நேரத்தில், அதை மீண்டும், திரும்ப வாங்கிக் கொண்டதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே, அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில், நேற்று, பிளஸ் 1 மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. மதியம், 1:00 மணிக்கு, நிகழ்ச்சிக்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நான்கு மாணவர்களுக்கு மட்டும், லேப்டாப் வழங்கி விட்டு, 1:15 மணிக்கு, புறப்பட்டு சென்றார். அவர் சென்றவுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நான்கு லேப்டாப்களையும், அவர்களிடமிருந்து, ஆசிரியர்கள் மீண்டும், வாங்கி அலுவலக அறையில் வைத்து பூட்டியதால், மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து பெற்றோர் கூறியதாவது: பிளஸ் 1 வகுப்பில், மொத்தம், 59 பேர் படித்து வரும் நிலையில், 46 லேப்டாப்கள் மட்டுமே வந்துள்ளதால், அனைவருக்கும் லேப்டாப் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெயரளவுக்கு விழா நடத்தி, நான்கு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கி விட்டு, அதை மீண்டும், ஆசிரியர்கள் வாங்கி அலுவலகத்தில் வைத்து விட்டனர். இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, ஒரு வாரத்தில் மீதமுள்ள, 13 லேப்டாப்கள் வந்து விடும் எனவும், அப்போது, அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்படும் என, தெரிவித்தனர். விழாவுக்கு தேவையான பெஞ்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களே எடுத்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதால், அவதிப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X