மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் 40 பவுன் நகை, பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் 40 பவுன் நகை, பணம் திருட்டு

Added : ஜூலை 14, 2019

அரூர்: அரூரில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில், 40 பவுன் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர், திரு.வி.க., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 76; அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். கடந்த, 10ல், தன் குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு, நேற்று காலை, 4:30 மணிக்கு, வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த, 40 பவுன் நகை, 42 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது. அரூர் டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய், பைரவா சிறிது தூரம் ஓடி விட்டு, நின்று விட்டது. கடந்த, 2017 அக்.,10ல், இதேபோல், அவரது வீட்டில், 10 பவுன் நகை மற்றும், 30 ஆயிரம் ரூபாய் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X