நேபாளம் மழைக்கு 47 பேர் பலி

Updated : ஜூலை 14, 2019 | Added : ஜூலை 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

காத்மாண்டு: நேபாளத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியாகி உள்ளனர். மாயமான சிலரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 க்கணக்கான வீடுகள் சேதமுற்றுள்ளன.







நேபாளம் மற்றும் இமாலய மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனனர். மழை நீர் சூழ்ந்ததால் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றுள்ளன.





மகோத்தரி மாவட்டத்தில் உள்ள கிழ மேல் நெடுஞ்சாலை பாலம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. 47 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.






பலத்த மழை எச்சரிக்கை



இன்னும் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 செ.மீ. மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

ஆண்டுதோறும் ஜீன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் மழையில் பலர் நேபாளத்தில் உயிரிழப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
14-ஜூலை-201913:44:02 IST Report Abuse
GMM இந்திய அரசு நேபாள துயருக்கு எப்போதும் உதவ வேண்டும். நேபாள மக்கள் நலம் இந்தியாவிற்கு முக்கியம். சீனாவின் கவனம் நேபாளம் மீது திரும்பி விட கூடாது.
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
14-ஜூலை-201911:21:52 IST Report Abuse
முதல் தமிழன் God must save them.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X