பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஜூலை 14, 2019
Advertisement

தொட்டி அகற்றம்; நீர் பற்றாக்குறை: போச்சம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் முன்புறம், 2014ல், போர்வெல் அமைத்து பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டது. இதிலிருந்து அருகில் இருந்தவர்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் இரண்டு ஆண்டில் மோட்டார் பழுதால், தண்ணீர் ஏற்ற முடியவில்லை. கடந்த மாதம் பிளாஸ்டிக் தொட்டியை, பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அகற்றி விட்டனர். இதனால், தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.
மோசமான சாலை சீரமைக்கப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளி கிராமத்தில் இருந்து, உல்லட்டி பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லி பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. டயர்களை பதம் பார்த்து வருவதுடன், வாகன ஓட்டிகளை சறுக்கி விழ செய்கிறது. இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X